Wednesday, July 22, 2015

வருகின்ற தேர்தலிலே முக்கியப் பங்கே வகித்திடுமாம் மதுவிலக்கு அதனை இங்கே!


வருகின்ற தேர்தலிலே முக்கியப் பங்கே
வகித்திடுமாம் மதுவிலக்கு அதனை இங்கே!
தருகின்ற கட்சிக்கே எங்கள் ஓட்டே
தருவோமென ஒன்றாகி மக்கள் கேட்டே!
பெறுகின்ற நிலைதன்னை செய்ய இன்றே
பெரும்பான்மை அவருக்கே தருதல் என்றே!
நெறிநின்றே ஓரணியாய் பாடு படுவோம்
நீங்காது இல்லையெனில் நாமே கெடுவோம்!


நல்லதொரு வாய்ப்பிதனை நழுவ விட்டால்
நாடெங்கும் மதுக்கடையே கண்ணில் பட்டால்!
அல்லதொரு வாழ்க்கைதான்! துன்பம் சூழும்
அழுகின்ற குடும்பங்கள் எவ்வண் வாழும்!
வல்லதொரு ஆயுதமே இந்தத் தேர்தல்
வாக்குரிமை பெற்றவர்கள உணர்த்து ஓர்தல்!
இல்லையெனில் எதிர்காலம் இருண்டே போகும்
இளையோரும் போதையிலே அழிதல் ஆகும்!

புலவர் சா இராமாநுசம்

30 comments:

  1. வணக்கம்
    ஐயா.
    நிச்சயம் முதல் மக்கள்உணர வேண்டும் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  4. மக்கள் உணரவேண்டும்.

    ReplyDelete
  5. வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த்து வாக்களிப்பதே வாடிக்கையாகி விட்டதே ஐயா?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  6. அறுபத்தேழா, எழுபத்தொன்றா? அப்போது கேட்ட வேண்டுகோள்! இப்பவும் நடக்கும் என்கிறீர்கள்? நம்பிக்கை இல்லை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete

  7. வணக்கம் !
    ஆணித்தரமான உண்மை !மிக அழகாக உணர்த்தியுள்ளீர்கள் ஐயா !மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  8. நம்பி ஏமாறுவோம் :)

    ReplyDelete
  9. குடிமக்கள் உணர்ந்தால் குடிவிலக்கு கிடைக்கும்! அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  10. தாங்கள் கூறியபடி வரவுள்ள தேர்தலை மனதில் வைத்தே அனைத்தும் அரங்கேறுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  11. தேர்தல் நேர பொய் வாக்குறுதிகள் ஆரம்பித்து விட்டன!.... செய்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  12. செய்வார்கள்? நம்பிக்கையே அற்றுப் போய்விட்டது ஐயா!!

    ReplyDelete
  13. சரியாகச் சொன்னீர்கள்...ஆனால் நம்பிக்கை இல்லை...ஓட்டு வாங்கியதுடன் அவர்கள் வேலை முடிந்தது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  14. நல்லது தேர்தல் வரட்டும்......

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  15. கனவு மெய்ப்பட வேண்டும்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  16. மதுவால் தள்ளாடும் தமிழகம்
    வரும் தேர்தலிலாவது
    நிமிர்ந்து நிற்கட்டும்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  17. Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete