Monday, July 20, 2015

தியாகம் தியாகமென -காந்தி தினமும் செய்தார் யாகமென!



தியாகம் தியாகமென -காந்தி
தினமும் செய்தார் யாகமென!
யோகம் சிலருக் கதனாலே -அதனை
சொல்ல வந்தேன் இதனாலே!
போகம் கருதி சுகம்தேடி-அவர்
புகுந்தார் அரசியியல் தனைநாடி!
தாகம் இன்னும் தணியவில்லை-தினம்
தந்திடும் துயருகே ஏதுயெல்லை!


பெற்ற விடுதலைப் பறிபோகும்-அதைப்
பேணிக் காக்கும் நெறிகூறும்!
கற்றவர் கூட ஏனோதான்-ஏதும்
கவலையற்றே வீணே தான்!
மற்றவர் வேலையே பார்க்கின்றார்-கேட்டால்
மனதைமூடி மறைக் கின்றார்!
அற்றவர் வாழ்வே போராட்டம்-என
ஆனது ஆட்சி தேரோட்டம்!

எத்தனை காலம் இப்படியே-ஆள்வோர்
எடுத்து வைத்தால் தப்படியே!
அத்தனை வகையும் ஒன்றாக-சேரின்
அழிவும் வருமே நன்றாக!
மெத்தனம் வேண்டாம் கட்சிகளே-இனி
மேலும் வேணுமா சாட்சிகளே!
புத்தரைப் போல தெளியுங்கள்-நல்லோர்
போற்ற ஆட்சியை அளியுங்கள்!

புலவர் சா இராமாநுசம்

21 comments:

  1. அருமையாகச் சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. வணக்கம்
    ஐயா

    உண்மையான வரிகள் பகிர்வுக்கு நன்றி த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. மக்கள் இன்னும் அஹிம்சைவாதிகளாய் இருந்தால் என்று தீரும் இந்த கொடுமை :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. //-நல்லோர்
    போற்ற ஆட்சியை அளியுங்கள்!//
    கனவு மெய்ப்பட வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. புத்தரை போல தெளியுங்கள் நல்லதோர் ஆட்சி அளியுங்கள்! செய்வார்களா? செய்தால் நன்றாக இருக்கும்! அருமை ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  6. தெளியுங்கள் என்று சொன்னாலே தெளிவது சிரமம். புத்தரைப் போலத் தெளியுங்கள் என்று எளிதாகக் கூறிவிட்டீர்கள். அதெல்லாம் முடியுமா ஐயா?

    ReplyDelete
  7. வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  8. அனைவருக்குள்ளும் இருக்கும் ஆதங்கத்தை
    அற்புதமான கவியாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  9. "பெற்ற விடுதலைப் பறிபோகும் - அதைப்
    பேணிக் காக்கும் நெறிகூறும்!" என்றே
    எல்லோரும் எண்ணிப்பார்க்க வேணுமே!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  10. அற்புதமான கவிதை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  11. நல்ல கவிதை வரிகள்...புத்தரைப் போல தெளியுங்கள்-நல்லோர்
    போற்ற ஆட்சியை அளியுங்கள்!// ஆனால் தெளிந்தால் நல்லது புத்தரைப் போல இல்லை என்றாலும்...

    ReplyDelete