மதுவே மதுவே மயக்கும் மதுவே –இன்று
மக்களை அழிக்கும் கூற்றாம் எதுவே!
அதுவே அதுவே டாஸ்மாக் அதுவே-ஐயம்
அணுவும் இல்லை உண்மை இதுவே!
குடியை ஒழிக்கும் கொள்கை ஒன்றே-பலரும்
குறிக்கோள் ஆமென சொல்வார் இன்றே!
விடிவே வருமா! தேர்தல் வருதே –மதுவினை
விலக்கிட சட்டம் மீண்டும் தருமா!
வாக்கினை அளிக்க வரிசையில் நின்றும்-பணம்
வழங்கிய கட்சிக்கு அளித்திடச் சென்றும்!
போக்கினை மக்கள மாற்றினால் போதும்-அவரே
புரிந்து தெளியின், போமே ஏதம்!
புலவர் சா இராமாநுசம்
விலக்கு வந்தால் பல வீடுகளில் விளக்கு பிரகாசமாகும் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteசரிதான்..
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteசரியாச் சொன்னீங்க ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅருமை அருமை விலக்கினால் விடிவு காலமே ...!
ReplyDeleteமிக்க நன்றி!
DeleteARUMAIYANA VARIKAL.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteதெளிவதற்கு வாய்ப்பே இல்லை. தாமாகவே திருந்தினால்தான் உண்டு.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteசரியாகச் சொன்னீர்கள் ஐயா.மக்கள் மாறினால் மாற்றம் உண்டு.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteமதுவினை விலக்கினால் மாநிலம் உருப்படும்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteஅருமையான சொன்னீங்க ஐயா!
ReplyDeleteமது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று சொல்லியே வித்துடறாங்க ஐயா...என்னத்தச் சொல்ல...அருமையான வரிகள்!
ReplyDelete