Tuesday, July 14, 2015

இசையுலகின் முடிசூடா மன்னராக –எம் எஸ் இருந்தாரே !மறைந்தாரே மின்னலாக!



இசையுலகின் முடிசூடா மன்னராக –எம் எஸ்
இருந்தாரே !மறைந்தாரே மின்னலாக!
அசைந்தாடும் செடிகொடிகள் மயங்கிப்போக-அவர்
அமைத்திட்ட இசையாலே அமைதியாக!
திசைஎட்டும் கொடிகட்டி பரவபுகழே –காது
தித்திக்க தெவிட்டாது என்றும் திகழ!
வசையேதும் இல்லாது புனிதரவரே-இசை
வரலாற்றில் நிகராக இருப்பதெவரே!


புலவர் சா இராமாநுசம்

26 comments :

  1. இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு நீங்கள் அளித்த கவிதாஞ்சலியில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்!
    த.ம.1

    ReplyDelete
  2. முடிசூடா மன்னரும்..முடி சூடிய மன்னரும் ஒரு நாள்..ஒருநாள் இவ்வுலகில் மறைந்துதான் ஆவார்கள். அது இயற்கை...

    ReplyDelete
  3. முடிசூடா மன்னரும்..முடி சூடிய மன்னரும் ஒரு நாள்..ஒருநாள் இவ்வுலகில் மறைந்துதான் ஆவார்கள். அது இயற்கை...

    ReplyDelete
  4. ஆழ்ந்த அனுதாபங்கள் எம் எஸ். வி ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  5. மெல்லிசை மன்னரின்
    கண்ணீர் அஞ்சலியில்
    வலை உலகமும் பங்கேற்கின்றது
    த ம 6
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. நல்ல கவிதை ஐயா...
    மெல்லிசை மன்னரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா
    ஆழ்ந்த இரங்கல்கள்....த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. என் ரத்தத்திலும் ஊடுருவி நிற்கிறது அவரின் இசை !

    ReplyDelete
  9. அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் மிக்க நன்றி
    வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  10. நல்ல அஞ்சலி. அவருக்கு நிகர் அவரே.

    ReplyDelete
  11. அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  12. மெல்லிசை மன்னரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...