ஏதேதோ எண்ணங்கள் இரவு முழுதும்-நெஞ்சில்
எழுந்துவர உறக்கமில்லை! விடிய! பொழுதும்!
தீதேதும் இல்லாமல் நாளும் கழிய –இறையைத்
தொழுதபடி எழுந்துவர இருளும் அழிய!
மாதேதும் இல்லாத மனையைப் போன்றே-எந்தன்
மனந்தனில் வெறுமையாம் உணர்வுத் தோன்ற
ஆதாரம் அற்றுப்போய் நிற்கும் மரமாய்-நானும்
ஆனேனோ!? அறியேனே! சொல்ல! தரமாய்!
வாழ்கின்ற நாள்வரையில் தொல்லை யின்றி-காத்து
வருகின்ற மகளுக்கு செய்யும் நன்றி!
வீழ்கின்ற நாள்வரையில் அமைய வேண்டும்-இதுவே
வேண்டுதல்! ஆண்டவ! அறிவாய் ஈண்டும்!
சூழ்கின்ற கவலைகள் விலகிப் போக-காலைச்
சுடர்கண்ட பனியாக முற்றும் ஆக!
ஆதாரம் ஆனது வலையே ஆகும் – எந்தன்
ஆயுளை வளர்ப்பதும் உண்மையாகும்!
புலவர் சா இராமாநுசம்
அருமை ஐயா! கவலைகள் வேண்டாம்! தமிழ் இணைய நண்பர்கள் துணைக்கு இருக்கின்றோம்! துன்பம் எதற்கு?
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteபேரின்ப பேராயுள் பெற்றே நீவீர்
ReplyDeleteபார் போற்ற வாழ்வீர் வாழ்வாங்கு
த ம 2
உணர்ச்சிக் கவி! தந்தமைக்கு
நன்றி புலவர் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வெறுமையை போக்க நாங்கள் (பதிவர்கள் நட்பு) இருக்கும் போது கவலை வேண்டாம் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி!
DeleteKavalai vendam Ayyaa
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவலை இருக்க
ReplyDeleteகவலை ஏன் ஐயா
மிக்க நன்றி!
Deleteசென்னையில் உள்ள வலைப்பதிவு நண்பர்களிடம் நேரிலோ அல்லது போனிலோ உரையாடுங்கள். எல்லாம் சரியாகி விடும்.
ReplyDeleteத.ம. 5
மிக்க நன்றி!
Deleteதங்களது மனச்சுமைகளைப் பகிர்ந்துகொள்ள கவிதை உதவுகிறது. நாங்கள் இருக்கிறோம். உரையாடுங்கள், நாங்களும் கலந்துகொள்கிறோம் தொடர்ந்து.
ReplyDeleteநன்றி!
Deleteகவலை மறக்க வலை இருக்கிறதே.....
ReplyDeleteத.ம. +1
நன்றி!
Deleteஅடடா இது என்ன சின்னப் பிள்ளை மாதிரி வலை இருக்கிறது அதில் அகப்பட நாமெல்லாம் இருக்கிறோம். பின் என்ன இதையெல்லாம் விட அழியாச் சொத்தாய் அழகிய கவிதை கைவசம் இருக்கிறது. வேறு என்ன வேண்டும். கவிதையில் கவனத்தை செலுத்துங்கள். தொடர்கிறேன். நன்றி! தொடர வாழ்த்துக்கள் ...!
ReplyDelete