Saturday, July 11, 2015

பாருங்கள் மாண்புமிகு முதல்வர் அம்மா-இங்கு பள்ளி மாணவியே மதுவருந்தல் ஆனதம்மா!



பாருங்கள் மாண்புமிகு முதல்வர் அம்மா-இங்கு
பள்ளி மாணவியே மதுவருந்தல் ஆனதம்மா!
ஓருங்கள் இனியேனும் மதுவை நீக்க- என்ன
உரியவழி ! காணுங்கள்! தீமைப் போக்க!
கூறுங்கள் மேலுமிது வளர்தல் நன்றா-தாயாம்
குலத்திற்கே மாசாகும்! தீரும் ஒன்றா!?
மாறுங்கள்! மதுவிலக்கு கொள்கை தன்னில்- நீங்கள்
மனம்வைத்தால் நடந்துவிடும்! உண்மை எண்ணில்!


எதிர்கால சந்ததியர் வாழ வேண்டும் –இன்று
எடுக்கின்ற முடிவாலே நாட்டில் மீண்டும்!
சதிராடும் மதுவெறியே முற்றும் போகும்-வரும்
சரித்திரத்தில் உம்பெயரே நிலையாய் ஆகும்!
நிதிவேறு வழிதனிலே தேடிக் கொள்வீர –நீங்கள்
நினைத்தாலே போதுமது !முடியும் ! வெல்வீர்!
மதிமாறும் மதுவாலே மனிதக் கூட்டம்- அன்னார்
மனம்மாறிக் கொள்வாரே குடும்ப நாட்டம்!

புலவர் சா இராமாநுசம்

29 comments:

  1. வேதனையானதொரு நிகழ்வு. முன்னரே பலமுறை பள்ளிச் சிறார்கள் டாஸ்மாக்கில் மது வாங்குவதையும், மது அருந்தி தெருவில் கிடப்பதையும் செய்தித் தாள்களில் கண்டிருக்கிறோம். ஆட்சியாளர்கள் செய்தித் தாள்களே பார்ப்பதில்லை போலும்.

    :(((

    ReplyDelete
  2. மதுவின் தாக்கம் மாணவிகளிடமும்
    வேதனையான நிகழ்வு ஐயா
    இனியும் தாமதிக்காமல் மது விலக்கை அமல் படுத்த வேண்டும் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  3. தேவை ஒரு முற்றுப்புள்ளி...

    ReplyDelete
  4. #நிதிவேறு வழிதனிலே தேடிக் கொள்வீர#உண்மையான சொல் ,நிதியைத் திரட்ட வேறு வழியா இல்லை ?

    ReplyDelete
  5. மிகவும் வேதனையான நிகழ்வு. அனைவரும் வெட்கப்படவேண்டியது.

    ReplyDelete
  6. // நீங்கள்
    நினைத்தாலே போதுமது //

    விரைவில் நினைத்து நல்லதொரு முடிவு காண வேண்டும்...

    ReplyDelete
  7. "பாருங்கள் மாண்புமிகு முதல்வர் அம்மா-இங்கு
    பள்ளி மாணவியே மதுவருந்தல் ஆனதம்மா!
    கூறுங்கள் மேலுமிது வளர்தல் நன்றா-தாயாம்
    குலத்திற்கே மாசாகும்!" என்று
    பதிலிறுக்கினாலும் கூட
    அரசுகள் இணங்கியோ இறங்கியோ வருமா?

    ReplyDelete
  8. ஒருவேளை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், கருவூலத்திற்கு வரும் வருமானம் குறையாதவாறு பார்த்துக்கொண்டு அரசு ஏதேனும் செய்யலாம்.

    ReplyDelete
  9. மது மதியை மயக்கும்
    புலவர் அய்யா அவர்களே!
    உமது கவிதை!
    அம்மாவின உள்ளத்தை உறுத்தும்!
    நல்லத் தீர்ப்பை உலகம் சொல்லும்
    நாள் வர வேண்டும்!
    த ம
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  10. வேதனையான நிகழ்வு ஐயா...
    ஆனால் அரசு வருமானம் பார்க்கும் துறையல்லவா? எப்படி ஒழிப்பார்கள்.

    ReplyDelete
  11. வேண்டா‘மது’

    தொடர்கிறேன் ஐயா.

    நன்றி

    ReplyDelete
  12. மிக மிக வேதனையான நிகழ்வு ஐயா! பூனைக்கு மணி கட்டுவது யார்? எது எதற்கெல்லாமோ சட்டங்கள் மதுவை ஒழிக்க சட்டம் ஏதும் இல்லையா?

    ReplyDelete
  13. அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது. பண்பாட்டு சீரழிவில் இருந்து காக்க வேண்டும்

    ReplyDelete
  14. நாட்டு நடப்புக்களை சுடச்சுட கவிதையாக்கி பதிவு செய்து அசத்துகிறீர்கள்...சமீபத்தில் வகுப்பில் மாணவியர், வகுப்பின் கடைசி வரிசையில் கைபேசியில் 'அந்த மாதிரி' படம் பார்த்துக் கொண்டிருந்ததை ஆசிரியர் கண்டுபிடித்ததாக செய்தி படித்தேன்...! என்ன கொடுமை சார் !

    ReplyDelete
    Replies
    1. jதங்கள் பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி!

      Delete