Thursday, July 2, 2015

காண்பதே இன்றைய மனிதநிலை!



போதுமென்ற மனம் கொண்டே
புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே!
எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே!
தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்!
சொல்லில் இன்றைய மனிதநிலை!


மாறிப் போனது மனிதமனம்
மாறும் மேலும் மனிதகுணம்!
ஊரும் மாறிப் போயிற்றே!
உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்!
பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை!
இதுதான் இன்றைய மனிதநிலை!

மேடையில் ஏறினால் ஒருபேச்சே
மேடையை விட்டால் அதுபோச்சே!
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல!
வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென!
குணமே இன்றைய மனிதநிலை!

பற்று பாசம் எல்லாமே
பறந்தது அந்தோ! இல்லாமே!
சுற்றம் தாழல் சொல்லாமே
சொன்னது போனதே நில்லாமே!
முற்றும் துறந்தது கபடமென!
முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை!
காண்பதே இன்றைய மனிதநிலை!

புலவர் சா இராமாநுசம்

18 comments :

  1. சுயநலமும், சந்தர்ப்பவாதமும் சேர்ந்த உலகம்.

    ReplyDelete
  2. இன்றைய மனிதரின் உண்மை நிலைகள் ஐயா...

    ReplyDelete
  3. வணக்கம் புலவர் ஐயா !

    செருக்குப் பிடித்த மனிதர்க்குச்
    ...............செல்வம் மட்டும் குறிக்கோளாய்
    இருக்கும் வரையில் இவ்வுலகில்
    ...............எங்கும் இல்லை மனச்சாட்சி
    நெருப்புச் சுட்ட மண்ணாக
    ...............நெஞ்சம் கொண்டார் வாழ்விடத்தில்
    விருத்தி தேடி வீண்காலம்
    ...............விரயம் செய்வதில் பயனுண்டோ !

    அருமை ஐயா தொடர வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன்

    தமிழ்மணம் +1

    ReplyDelete

  4. "மேடையில் ஏறினால் ஒருபேச்சே
    மேடையை விட்டால் அதுபோச்சே!
    ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
    ஆளை மதித்து வருவாரோ?" என
    நன்றாகச் சிந்திக்க வைக்கிறியளே!

    ReplyDelete
  5. கற்றும் அறியா மூடநிலை!
    காண்பதே இன்றைய மனிதநிலை!

    உண்மைதான் கல்வி முட்டாள்தனத்தை போக்கவில்லை

    ReplyDelete
  6. இதுதான் இன்றைய நிலை.
    அருமை

    ReplyDelete
  7. இந்த நிலை என்று மாறுமோ :)

    ReplyDelete
  8. போதுமென்பதை போதுமென நினைத்திருந்தால் நாம் மனித நிலையிலிருந்து மன ரீதியாக இன்னும் உயர்ந்திருப்போமே. நன்றி.
    தினமணியில் வெளியான எனது முதல் பேட்டியை http://www.ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html என்ற இணைப்பில் காண அழைக்கிறேன்.

    ReplyDelete
  9. மாறும் என்ற நம்பிக்கையோடு தமிழ்மணம் 10

    ReplyDelete
  10. இன்றைய நிலை சொல்லும் அருமையான கவிதை ஐயா...

    ReplyDelete
  11. வணக்கம்
    ஐயா
    இன்றைய நிலையை அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. சுயநலம் மிகுந்த கூட்டம்...... சொல்வதெல்லாம் பொய்யாகி விட்டது.....

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...