Tuesday, June 9, 2015

உழுது உழுது அலுத்தவனே உதிரிப் பூவாக ஆகிவிட்டான்!



உழுது உழுது அலுத்தவனே
உதிரிப் பூவாக ஆகிவிட்டான்!
அழுது அழுது வடித்த கண்ணீர்
ஆவி ஆனது வெம்மையிலே!
தொழுது வணங்க வேண்டியவன்
துவளவும் கைகள் முடங்கிவிடின்!
பழுது வந்திடிம் உலகத்திலே
பசியோடு பஞ்சமே கலகத்திலே!


அல்லும் பகலுமே பாடுபட்டோன்
அயராது சேர்த்திட்ட பொருளின்விலை!
சொல்லும் நிலையே அவனுகுண்டா?
சொல்லுங்கள் யாரேனும் கண்டதுண்டா!
கொல்லும் பசிப்பிணி மருத்துவனின்
குமுறும் உள்ளத்தை அறிந்திடுவீர்!
ஒல்லும் வழிதன்னை காண்பதுவே
உண்மையில் ஆள்வோரின் மாண்பதுவே!

புலவர்  சா  இராமாநுசம்

21 comments :

  1. உழவர்களின் நிலை உயர்ந்தால் தான் அனைவரும் வாழவே முடியும் ஐயா...

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    எமது நாட்டை தாங்கும் சக்திகள்அவர்களை பற்றி சொல்லிய விதம் வெகு சிறப்பு ஐயா
    த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. உழவன் நிலை உயர்ந்தால் தான் நாடும் உயரும் உணர வேண்டும் யாவரும்.

    ReplyDelete
  4. உழவின் பெருமை
    உணரா மக்கள்!
    ஊழ்வினை உற்றே
    உலகில் மாய்வர்.

    "உழவுக்கு வந்தணம் செய்வோம்!"

    சுதந்தர நாட்டின்
    சூழ்ச்சி அரசியலை
    அம்பலப் படுத்தும்
    அருங்கவிதையை
    அழகுற தருகிறீர்கள்
    புலவர் அய்யா!

    நன்றி!

    த ம 5

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  5. உலகத்தார்க்கு ஆணி துருப்பிட்டித்துக் கொண்டிருக்கிறதோ?
    த ம7

    ReplyDelete
  6. விவசாயிகளின் கண்ணீர் துடைக்கும் வார்த்தைகள் அருமை ஐயா.
    தமிழ் மணம் காலையில் முதலாவது...

    ReplyDelete
  7. உழவு இல்லையேல் உண்ண முடியாது என்பதை புரியாமல்...உண்கிறார்களே.... அவர்களின் வாழ்க்கையை...

    தம +1

    ReplyDelete
  8. உழவே தலை.

    அருமையான பாடல்வரிகள் ஐயா.

    நன்றி.

    ReplyDelete
  9. உழவே தலை.

    அருமையான பாடல்வரிகள் ஐயா.

    நன்றி.

    ReplyDelete
  10. தற்போது உழவைத் தொலைத்துவிட்டு ஏதோ திசை தெரியாத காட்டில் சென்றுகொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  11. பசிப் பிணி மருத்துவனை அவமதிப்பவர்கள் ,மருத்துவமனையில் அடைக்கலமாக வேண்டி வரும் !

    ReplyDelete
  12. இன்றைக்கு உழவர்கள் படும் பாட்டை ஊருக்கு உணர்த்தும் வரிகள் உள்ளத்தின் ஆதங்கம் தெரிவிப்பதாய்...

    ReplyDelete
  13. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்த உழவனின் இன்றைய நிலையை 16 வரிகளில் உணர்த்திய உங்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  14. உழவர் இல்லையேல் உலகோர் இல்லை.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...