Monday, June 8, 2015

பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா?



பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
பணத்தைத் தேடி எடுப்பதற்கா?
வெள்ளிப் பணமே குறியாக –பெற்றவர்
வேதனைப் படுவதே நெறியாக!
சொல்லிக் கொடுப்பதில் இரண்டாமே-பாடம்
சொல்வதில் பிரிவு முறையாமே!
உள்ளுவீர்! தனியார் பள்ளிகளே –உடன்
உணர்வீர்! இன்றேல் கறையாமே!!


புலவர் சா இராமாநுசம்

25 comments :

  1. வணக்கம்
    ஐயா
    காலம் உணர்ந்து கவிவடித்த விதம் வெகு சிறப்பு ஐயா...
    இவர்கள் எல்லோருக்கும் -பணம்.. பணம்...த.ம 2


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. இன்று இலாபகரமான வணிகம் பள்ளிக்கூடம்தான்!

    ReplyDelete
  3. பள்ளிக்கூடம் என்பது பணம் பறிக்கும் கூடமாகி வெகு நாட்கள் ஆகிவிட்டன ஐயா! அரசு/நீதிமன்றம் தலையிட்டாலோழிய இந்த கொள்ளையை தடுக்க இயலாது

    ReplyDelete
  4. அனைவரும் உணர வேண்டிய விடயங்கள் ஐயா.
    தமிழ் மணம் முதலாவது.

    ReplyDelete
  5. பள்ளிக் கூடங்கள் வணிகமயமாகி விட்டதே ஐயா
    என் செய்வது
    தம் +1

    ReplyDelete
  6. பெரும் பணத்தை எடுக்கத்தான் ஐயா. தற்போது நிலைமை அப்படி ஆகிவிட்டது. எங்கும் வணிகமயம்.

    ReplyDelete
  7. பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்..... என்று இதிலிருந்து மக்களுக்கு விடுதலையோ.

    ReplyDelete

  8. இந்த காலத்தில் பள்ளிக் கூடம் படிப்பது-பெரும்
    பணத்தைத் தேடி எடுப்பதற்குத்தான் அய்யா..த.ம் 9

    ReplyDelete
  9. கல்வி கொடுப்பது முன்பு தர்மம் என்றார்கள் ,இன்று கொள்ளை அடிப்பதை கல்வி கொடுக்கிறோம் என்கிறார்கள் :)

    ReplyDelete
  10. இந்நிலை மாற வேண்டும் ஐயா !மனதைத் தொடும் வரிகளில் எப்போதும் போல் அருமையான ஆக்கம் ! மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  11. நல்ல வியாபாரம் தான் ஐயா...

    ReplyDelete
  12. வியாபாரமாகிப்போன கல்வி நிலை தான் ஐயா.

    ReplyDelete
  13. அரசாங்க ஆதரவுடன் நடக்கும் கல்வி வியாபாரம் ....கட்டுப்படுத்துவது கடினமே!

    ReplyDelete
  14. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. G.M. பாலசுப்பிரமனியன் அவர்கள் இன்று (26/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://blogintamil.blogspot.fr/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  15. வலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா உங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களது தளத்தினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...