Friday, June 5, 2015

எழுத்துதனை அறிவித்தான் இறைவன் என்றே எண்ணியதோர் காலமது இல்லை இன்றே!



எழுத்துதனை அறிவித்தான் இறைவன் என்றே
எண்ணியதோர் காலமது இல்லை இன்றே!
ஒழுக்கமின்றி அப்பணியைச் செய்வோர் சிலரால்
ஊர்தோறும் நடக்கின்ற செய்தி வரவால்!
இழுக்குமிக, ஐயகோ! பெருமை போச்சே
இதயத்தில் வேதனையே நிலையாய் ஆச்சே!
வழுக்குநிலம் ஆயிற்றாம் கல்வி இன்றே
வகுப்பறையில் ஆசிரியர் உணர்தல் நன்றே!


புலவர் சா இராமாநுசம்

15 comments:

  1. அருமையான வரிகள் ஐயா
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. சிற்றின்ப ஆசிரியர்களுக்கு சிறந்த பாடம் அய்யா உங்கள் கவிதை :)

    ReplyDelete
  3. வெறும் கற்றுச் சொல்லிகளாகப் போனதே காரணம் ஐயா!

    ReplyDelete
  4. ஆசிரியர் ஏங்கினால் நாடே ஏங்குமாம் அய்யா..த.ம.4

    ReplyDelete
  5. அக்காலம் மலையேறிவிட்டது தான் ஐயா இப்போது...

    தம +1

    ReplyDelete
  6. ஆதங்கத்தின் வெளிபாடு கண்டேன் ஐயா.

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா
    ஆதங்கத்தின் வெளிப்பாடு கவியில் சொல்லிய விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
    த.ம 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. பாடம் புகட்ட வேண்டியவர்களே பாடத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியவர்களாகிவிட்டார்கள். வேதனைதான்.

    ReplyDelete