தலைக்கனம் இல்லை என்றே –காவலர்
தடுத்திடும் நிகழ்வுகள் இன்றே!
விலை,கனம் வாங்க வில்லை –என்ற
வேதனை அறியாத் தொல்லை!
இலை,கனம் பையில் ஆமே –பணம்
இல்லாத குறையும் தாமே!
நிலைக்கனும் சட்டம் என்றால் –கால
நீட்டிப்பே நியாயம் இன்றாம்!
நடுத்தர குடும்பத் தாரே –இன்று
நாதியில் ஊமை யாரே!
எடுத்திதைச் சொல்லக் கூட –சற்றும்
எண்ணிடார்! நாளும் ஓட!
தடுத்திடும் சட்டம் கண்டே- அவர்
தாங்கிடார்! துயரம் கொண்டே!
விடுத்தனன்! நானும் இந்த –அரசை
வேண்டினேன் வணக்கம் தந்தே!
புலவர் சா இராமாநுசம்
நடுத்தர வர்க்கம் சார்பாக விடுக்கும் வேண்டுகோள்..
ReplyDeleteசிந்திக்க வேண்டும் அரசு.
தலைக்கனம் இல்லை என்றே –காவலர்
ReplyDeleteதடுத்திடும் நிகழ்வுகள் இன்றே!
நன்றி!
Deleteநடுத்தர குடும்பத் தாரே –இன்று
ReplyDeleteநாதியில் ஊமை யாரே! //
ஆம் நடுத்தரவர்க்கம்...
தம 3
தலைக் கனம் இன்றி வாழ்வதுதானே நல்லது :)
ReplyDeleteதலைக்கவசம் என்பது தலைக்கனம் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து ஐயா!
ReplyDeleteநன்றி!
Deleteமிக அருமையாக எளிய முறையில் கருத்துக்களை வழங்கியமைக்கு நன்றிகள் பல.
ReplyDeleteநன்றி!
Deleteஅரசு சிந்திக்க வேண்டும் ஐயா...
ReplyDeleteகொஞ்சம் கால அவகாசம் கொடுக்கலாம் என்பது சரிதான் ஐயா!
ReplyDeleteநன்றி!
Deleteஇன்றைய சூழலுக்கு மிக பொருத்தமான கவிதை!
ReplyDeleteதலைகனம் நல்ல சொல்லாடல்!
த ம 9
நன்றி!
Deleteதலைக்கவசம் மிக அவசியமே! எத்தனை கால நீட்டிப்புக் கொடுத்தாலும் சிலர் திருந்தப்போவதில்லை!
ReplyDeleteநன்றி!
DeleteArumai
ReplyDeleteT.M 11
வணக்கம் ஐயா !
ReplyDeleteசிந்திக்கத் தூண்டும் சிறப்புறும் கவிதந்தீர் அருமை ஐயா
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
தமிழ்மணம் +1
நன்றி!
Delete““ நாதியில் ஊமையாரே ”
ReplyDeleteஎன்ற வரிகைளை மிகவும் ரசித்தேன்.
நன்றி ஐயா.!
நன்றி!
Deleteமக்களின் நன்மைக்குச் சொன்னாலும் கெடுபிடி அதிகம்.
ReplyDeleteநன்றி!
Deleteநாங்கள் எங்கள் பதிவில் நீட்டி முழக்கி சொன்னதை தெளிவாக அழகாக சொல்லி விட்டர்கள் ஐயா!
ReplyDeleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
நன்றி!
Deleteவணக்கம்!
ReplyDeleteமனதை நெருடும் உண்மையை உணர வைத்த கவிதை வரிகள் !அரசும் இதனை உணர வேண்டும் .சிறப்பான சிந்தனை !வணங்குகின்றேன் ஐயா .
நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
சிந்திக்கவைக்கும் கவித்துவம் பகிர்வுக்கு நன்றி ஐயா.த.ம 17
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி!
Deleteதற்போதைக்கு தங்கள் பாணியில் கூறுவதென்றால் தலைக்கனம் (தலைக்கவசம்) தேவையே. நன்றி.
ReplyDeleteகட்டாய ஹெல்மெட்டால், நடுத்தர மக்கள் படும்பாட்டை கவிதையாகச் சொன்னீர்கள்.
ReplyDeleteத.ம.20
கட்டாயம் அணியத் தான் வேண்டும். சில மாநிலங்களில் வாகனம் வாங்கும்போது கூடவே தலைக்கவசமும் வாங்கினால் தான் வாகனம் பதிவே செய்வார்கள்.....
ReplyDeleteபோதிய அவகாசம் கொடுத்தால் நல்லது!