Thursday, June 4, 2015

மனித நேயம் இல்லையா? மத்திய அரசே சொல்லையா?


மனித நேயம் இல்லையா?
மத்திய அரசே சொல்லையா?

தினமே, தொல்லைப் படுகின்றான்
தேம்பியே மீனவன் கெடுகின்றான்!
மனமே இரங்க வில்லையா
மனதில் சுரக்க சொல்லையா?


சுண்டைக் காய்போல் அந்நாடே
சொன்னால் வெட்கம் பெருங்கேடே!
அண்டையில் இருந்தே தரும்தொல்லை
அளவா? அந்தோ துயரெல்லை!

கச்சத் தீவைக் கொடுத்தாரே
காரணம் எதுவோ ?கெடுத்தாரே!
அச்சப் பட்டே மீனவனும்
அல்லல் படுவதைக் காண்பீரே!

படகொடு பிடித்தே மீனவரைப்
பாழும் சிறையில் தள்ளுகின்றான்
இடமிலை மீனவர் உயிர்வாழ
எண்ணமும் உமக்கிலை அவர்வாழ

மாநில அரசையும் மதிப்பதில்லை
மத்திய அரசுக்கோ செவியில்லை
நாமினி செய்வதை ஆய்வோமா?
நல்லது நடப்பின் உய்வோமா?

புலவர் சா இராமாநுசம்

18 comments:

  1. அரசால்வோரின் செவிகளை எட்டுமா ?

    ReplyDelete
  2. மீளாத் துயரில் மீனவன் மீள்வது எப்போது?
    வேலாய் வென்று! துயர் துடைக்க வழி தேடும்
    கவிதை!
    இது எக்காலத்திற்கும், எந்த அரசுக்கும் பொறுந்தும்
    கவிதையாகி நிற்கும் என்பதுதானே தற்போது நிஜமாகி நிற்கின்றது
    புலவர் அய்யா!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. மனித நேயம் இல்லையென்னுதான் காட்டிவிட்டார்களே அய்யா...!!!த.ம.4

    ReplyDelete
  4. காது கேட்குமா...மாநிலத்துக்கு....பாவம் மீனவ சகோதரர்கள்.

    ReplyDelete
  5. எத்தனை நாள் தொடரும் இந்த அவலம்?

    ReplyDelete
  6. அருமை ஐயா அழகாக சாடினீர்கள்.
    இருப்பினும் கடைசி வரிகளையே நாம் கையிலெடுப்போம்

    நாமினி செய்வதை ஆய்வோமா ?
    நல்லது நடப்பின் உய்வோமா ?

    தமிழ் மணம் முதலாவது காலையில்.

    ReplyDelete
  7. அங்கேயும் இங்கேயும் ஆட்சி மாறியும் கூட கொடுமை தொடர்கிறதே ,இதென்ன கொடுமை ?

    ReplyDelete
  8. சமீபத்திய நிகழ்வுகளை கவிதையாக வடிப்பதில் வல்லவர் அய்யா நீங்கள். இந்த கவிதையும் அதைத்தான் உணர்த்துகிறது.
    த ம 8

    ReplyDelete
  9. இக்கொடுமைக்கு விடிவே இல்லையா?

    ReplyDelete
  10. மிக்க நன்றி

    ReplyDelete
  11. விரைவில் துயர்கள் நீங்க வேண்டுகிறேன்...

    ReplyDelete