Friday, June 26, 2015

இல்லை என்றால் பெரும்போரே-இங்கு ஏற்படும் பொறுப்பு ஆள்வோரே!



எழுவாய்த் தமிழா எழுவாயா-அணையை
எழுப்பிய பின்னர் அழுவாயா!
வழுவாய்ச் சொல்லியே துடிக்கின்றார்-நீர்
வழங்கிட பொய்பல தொடுக்கின்றார்!
தொழுவாய் எதற்கு வடநாடே-அவர்
துணையால் நடப்பதே இக்கேடே!
கழுவாய் எதிர்ப்புப் போராட்டம்-அதைக்
கண்டவர் புத்தி மாறட்டும்!


முல்லைப் பெரியார் அணைமட்டும்-கேரள
மூடர்கள் கை யால் உடையட்டும்!
எல்லைப் போரே நடந்திடுமே-நம்
ஏக இந்தியா உடைந்திடுமே!
தொல்லை மத்தியில் ஆள்வோரே-உடன்
துடிப்புடன் விரைந்து தடுப்பீரே!
இல்லை என்றால் பெரும்போரே-இங்கு
ஏற்படும் பொறுப்பு ஆள்வோரே!

புலவர் சா இராமாநுசம்

23 comments:

  1. மத்திய அரசை சரியாக எச்சரித்து உள்ளீர்கள் அய்யா ,அது தன் கடமையை இனியாவது சரியாக செய்ய வேண்டும் !

    ReplyDelete
  2. கண்டவர் புத்தி விரைவில் மாறட்டும் ஐயா...

    ReplyDelete
  3. எழுச்சிமிகு வரிகள் கண்டு எழும்ப வேண்டும் மக்கள்.

    ReplyDelete
  4. வருமுன் காக்க வேண்டும் என்று உரைக்கும் பதிவு! நம் தமிழர்கள் செவியில் ஒலித்தால் நல்லது! நன்றி!

    ReplyDelete
  5. எழுச்சி மிகும் வரிகள் ஐயா...

    ReplyDelete
  6. அருமையான வரிகள் ஐயா! விழவேண்டிய செவிகளில் விழுந்தால் சரி!!!

    ReplyDelete
  7. வணக்கம் புலவர் ஐயா !

    சொல்லும் செயலும் பொய்யாகத் - தினம்
    சொத்துச் சேர்ப்பதில் குறியாக !
    அல்லும் பகலும் ஆள்வோர்கள் - இங்கே
    அழிவைப் பெறுவது வாழ்வோர்கள் !
    மல்லுக் கட்டும் மடையர்களால் - மனிதம்
    மறந்தே போகுது மனச்சாட்சி !
    முல்லைப் பெரியார் அணையுடனே - இனி
    முடியப் போகுது பலராட்ச்சி !

    சிந்திப்பார்களா இல்லை சிதைப்பார்களா பாரதத்தை

    அருமையான கவிதை ஐயா
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    தமிழ்மணம் கூடுதல் ஒன்று

    ReplyDelete
  8. எழுச்சி மிகு வரிகள்
    நன்றி ஐயா
    தம =1

    ReplyDelete
  9. ஒரு நல்ல் எச்சரிக்கைப் பகிர்வு
    கவிதையில் சொன்னதால் அழுத்தம் அதிகம்
    பகிர்வுக்கும் தொட்ரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அருமையான பா....

    மத்திய அரசு சரி வர செயல்பட வேண்டும்....

    ReplyDelete

  11. கவிதை கொஞ்சம் காரமாயத்தான் உள்ளது.நிச்சயம் உரைக்க வேண்டும்

    ReplyDelete
  12. அழகான வரிகள் அரசின் காதுகளில் விழுந்தால் நல்லது.
    த ம 14

    ReplyDelete