Wednesday, June 24, 2015

அதுஊழல் அல்லவென எடுத்துக் கூறும்-ஊடக அவலங்கள் ஐயகோ என்று மாறும்!



எதுஊழல் எனஅறியார் மக்கள் என்றே- ஏனோ
எண்ணுவதோ ? எவர்வரினும் ஆள இன்றே!
இதுஊழல் என்றிடுவர் ஆட்சிக் கட்டில்-அவர்
ஏறிவிட்டால் மறுப்பாரே அதனை ஏட்டில்!
புதுஊழல் துறைதோறும் நாளும் தோன்றும்-உரிய
போக்குதனை கூறுகின்ற எந்த சான்றும்!
அதுஊழல் அல்லவென எடுத்துக் கூறும்-ஊடக
அவலங்கள் ஐயகோ என்று மாறும்!


புலவர் சா இராமாநுசம்

26 comments :

  1. என்று மாறும்
    இந்த ஊடக அவலங்கள்!

    ReplyDelete
  2. ஆமாம்...அவலங்கள் தான்

    தம +1

    ReplyDelete
  3. அவலங்கள் என்று மாறும்? மாற வேண்டும்! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
  4. அருமை ஐயா... அவலங்கள் அவதிப் பட வேண்டும்...

    ReplyDelete
  5. உளுத்த தூண்களாகி விட்டன ஊடகங்கள்.

    உங்களின் கவலை உண்மைதான் ஐயா!


    நன்றி.

    ReplyDelete
  6. ஜனநாயகத்தின் நான்காம் ..இல்லை இல்லை .நாறும் தூண்கள் ஆகிவிட்டன ஊடகங்கள் !

    ReplyDelete
  7. வணக்கம் புலவர் ஐயா !

    ஒற்றுமை ஒன்றே உயர்வாக்கும்! உள்ளுணர்வில்
    பற்றுதல் கொண்டால் பழுதறுக்கும் - குற்றமே
    அற்றார் குவலயத்தில் எங்குமிலை ! அஃதுண்டேல்
    முற்றும் துறந்த முனி !

    காதற்ற ஊசியும் வாராதுகாண் மாயக் கடைவழிக்கு
    என்னும் பட்டினத்தார் வார்த்தைகளைப் பாடமாய் எடுத்தாலும் இந்தப் பச்சோந்திகள் திருந்தவே திருந்தாது !

    நடைமுறைக்கு ஏற்ற கவிதை அருமை ஐயா
    வாழ்க வளமுடன்
    தமிழ்மணம் வாக்கு ஒன்று

    ReplyDelete
  8. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (25/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  9. அரசியல்+ஊடகங்கள், விளைவு இப்படித்தான் இருக்கும்.

    ReplyDelete
  10. ஊழலை
    இல்லையென்று சொல்வதும்
    ஒரு ஊழல்தானே
    நன்றி ஐயா
    தம =1

    ReplyDelete
  11. ஊடக அவலம் இன்று அதிக ஊழல் துறையாக மாறிவிட்டதோ என்று சிந்திக்க தூண்டுகின்றது. அருமையான கவி ஐயா.

    ReplyDelete
  12. சிந்திக்க வைத்த பதிவு.

    த.ம. +1

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...