பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும்
இறப்பு வழ்வில் ஒருமுறைதான்!
இருப்பது நாமே எதுவரையில்-இதை
எவரும் அறியார் இதுவரையில்!
சிறப்பு பெறநாம் வாழ்ந்தோமா-என
சிந்தனை தன்னில் ஆழ்ந்தோமா!
வெறுப்பா மற்றவர் நமைநோக்க-பெரும்
வேதனை வந்து நமைதாக்க!
எண்ணிப் பாரீர் மனிதர்களாய்-பல்
இதயம் வாழ்த்த புனிதர்களாய்!
மண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
மனதில் திகழ ஞாலத்தே!
கண்ணிய முடனே வாழ்ந்தோமா-நம்
கடமை அதுவென ஆய்ந்தோமா!
பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
பயப்பட வாழ்வில் எதுவுமிலை!
மரணம் நம்மைத் தேடிவர-கேட்ட
மக்கள் அனைவரும் ஓடிவர!
வரமே பெற்றோம் நாமென்றே-அங்கு
வந்தோர் வாழ்த்த மிகநன்றே!
கரமே குவித்துக் கண்ணீரை-அவர்
காணிக்கை யாக்கப் பண்ணிரேல்!
தரமாம் உமது வாழ்வாகும்-பெயர்
தரணியில் என்றும் நிலையாகும்!
புலவர் சா இராமாநுசம்
அற்புதமான தத்துவப்பாடல்.
ReplyDeleteசிரம் தாழ்த்தி கண்கள் பனிக்க
தலை வணங்குகிறேன்.
தாங்கள் எனது நண்பர் என்பதே
நான் செய்த பாக்கியம்.
சுப்பு தாத்தா.
ஐயா எதற்கு அனுமதி! நீங்கள் என் பாடலைப் பாட நான் அல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும் நன்றி!
Deleteஇதுவரை கேட்கவில்லை கூகிளில் என்றால்
Deleteஇங்கும் கேட்கலாம்.
www.vazhvuneri.blogspot.com
சுப்பு தாத்தா
பிறப்பும் இறப்பும்
ReplyDeleteவாழ்வில் ஒரு முறை தான்
நம்மை எட்டிப் பார்க்கும்
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
விரைவாய் கரைந்திடும் வாழ்வை
பிறர் போற்ற வாழ்ந்தோமா
பிறர் தூற்ற வாழ்ந்தோமா
என்றாவது எப்போதாவது
நாம்
எண்ணிப் பார்த்ததுண்டா என்று
தங்கள் பா எம்மை
எண்ணிப் பார்க்க வைக்கிறதே!
வருகைக்கு மிக்க நன்றி!
Delete//கண்ணிய முடனே வாழ்ந்தோமா-நம்
ReplyDeleteகடமை அதுவென ஆய்ந்தோமா!
பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
பயப்பட வாழ்வில் எதுவுமிலை!//
அருமை ஐயா
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteதங்களது தத்துவப்பாடலைப் பாடி மகிழ்ந்திட,
ReplyDeleteபரவசம் அடைந்திட,
அனுமதி வேண்டுகிறேன்.அய்யா.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
வருகைக்கு மிக்க நன்றி!
DeleteSuper Aayya
ReplyDeleteT.M 1
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteவருகைக்கு மிக்க நன்றி
Deleteஅருமை அருமை ஐயா.
ReplyDeleteதம +1
வருகைக்கு மிக்க நன்றி
Deleteநல்ல கருத்தை சொல்லும் நயமான கவிதை
ReplyDeleteதம +
ReplyDeleteமிக்க நன்றி
Delete// தரமாம் உமது வாழ்வாகும் // அருமை ஐயா...
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி
Deleteவருகைக்கு மிக்க நன்றி
Deleteமண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
ReplyDeleteமனதில் திகழ ஞாலத்தே!
கண்ணிய முடனே வாழ்ந்தோமா-நம்
கடமை அதுவென ஆய்ந்தோமா!
பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
பயப்பட வாழ்வில் எதுவுமிலை!
உண்மை உண்மை
அருமை
நன்றி ஐயா
தம +1
வருகைக்கு மிக்க நன்றி
Deleteஅருமையான பாடல்!
ReplyDeleteத ம 6
வருகைக்கு மிக்க நன்றி
Deleteஇதனை உணர்ந்து நாம் செயல்பட்டாலே குற்றங்கள் குறையும். நன்மைகள் மேம்படும். கருத்துள்ள கவிதை.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி
Deleteசாவது ஒரு முறைதான் என்றாலும் நடப்பில் செத்து செத்து பிழைக்க வேண்டியுள்ளதே...அய்யா....
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி
Deleteஆம் ஐயா.தொலைந்தான் என சொல்லாமால் ஐயோ போய்விட்டாரே எனச் சொல்லுமாறு வாழ வேண்டும்
ReplyDeleteஅருமை
வருகைக்கு மிக்க நன்றி
Deleteவாழ்வியல் கலையை அருமையாய் சொன்னீர்கள் அய்யா !
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி
Deleteதரணியில் என்றும் நிலையாகும்!
ReplyDeleteதன்னிகரற்ற தத்துவக் கவிதை இதுவாகும்!
தம 10
நட்புடன்,
புதுவை வேலு
(புலவர் அய்யா அவர்களே! தங்களது இமெயில் முகவரி தர வேண்டுகிறேன்! நன்றி!)
வணக்கம் புலவர் ஐயா !
ReplyDeleteதெய்வம் வந்து சொன்னாலும்
.........திருந்தா மக்கள் மத்தியிலே
செய்யும் செயலில் மாற்றங்கள்
........சென்று சேரச் சிறப்புடனே
பெய்யும் மழையும் நிலம்பிரித்துப்
........பெய்யாத் தன்மை போலிங்கே
உய்யும் வழிகள் அத்தனையும்
........உரைத்துச் சென்றீர் வாழ்த்துகிறேன் !
தினமும் உங்கள் வலைக்கு வரத் தாமதம் ஆகிறது வருந்துகிறேன்
தொடர வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு !
நல்லதொரு தத்துவ கவிதை...
ReplyDeleteஒருவரது வாழ்கையின் சிறப்பு மரண நாளில் மற்றவர் கண்ணீரினால் பெயர் தரணியில் என்றும் நிலையாகும்! என அருமையான உண்மையான வரிகள் நன்றி
ReplyDelete