Thursday, June 18, 2015

ஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே!



ஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும்
எழுதிட முடியுமா பாட்டினிலே-நடக்கும்
தீதேதோ தெரியாது வாழுகின்றோம்-போகும்
திசைகாணா துயர்தன்னில் வீழுகின்றோம்-மேலும்
போதாதா விலைவாசி விண்ணைமுட்ட –தினம்
புலம்பிட மக்களும் கண்கள்சொட்ட! –அதனை
ஒதாது இருந்திட இயலவில்லை-ஏதோ
உள்ளத்தை வருத்திட இந்ததொல்லை


பகல்கொள்ளை படுகொலை பெருகிப் போச்சே-நாளும்
பயத்துடன் வாழ்கின்ற நிலையு மாச்சே!-வேறு,
புகலென்ன ! வழியின்றி! வருந்த லாச்சே-நாடும்
போவதோ காடாக! மாற லாச்சே!-மேலும்
மழையில்லை! இட்டபயிர் அழிந்து போக-கண்டே
மனம்குமுற, விவசாயி நொந்து சாக!-நீதியில்,
பிழையன்றோ ? ஆள்வோரே எண்ணி பாரீர்- ஏழைப்
பேதையர் அன்னாரைக் காக்க வாரீர்!

புலவர் சா இராமாநுசம்

23 comments :

  1. மாற்றம் வரும் என நம்புவோம் ஐயா
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. நாளும் பயத்துடன் வாழும் நிலை தான் இருக்கிறது. சரியாகச்சொன்னீர்கள் ஐயா.

    ReplyDelete
  3. வேதனையில் விளைந்த கவிதையாயினும்
    கவிதை அதி அதி அற்புதம்

    ReplyDelete
  4. நாட்டின் நடப்பு....வேதனையாகத் தான் இருக்கிறது. நல்ல மாற்றம் நிகழவேண்டும். தம +1

    ReplyDelete
  5. மிக்க நன்றி!

    ReplyDelete
  6. ஒண்ணுமே புரியலே உலகத்திலே...
    என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது...!

    ReplyDelete
  7. நாட்டுநடப்பை கவிதையாய் வடித்தவிதம் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. ஆம் ஐயா!நடக்கும் அவலங்கள் அனைத்தையும் வார்த்தயில் வடிக்கத்தான் இயலுமோ!

    ReplyDelete
  9. நாட்டு நடப்பு எழுதி மாளாது என்பது உண்மை

    ReplyDelete
  10. இந்த லட்சணத்தில் நாடு வல்லரசு ஆகும் நாள் தொலைவில் இல்லையென்று காது குத்துகிறார்களே :)

    ReplyDelete
  11. வல்லரசுநாட்டின் வகிசியை தோல் உரித்துவிட்டீர்கள் அய்யா...

    ReplyDelete
  12. எவரும் திருந்துவது என்பது ஐயமே. நல்ல சிந்தனையுடன் கூடிய கவிதைக்கு நன்றி. அண்மையில் விக்கிபீடியாவில் 200 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன், காண வாருங்கள்.
    http://drbjambulingam.blogspot.com/2015/06/200-5000.html

    ReplyDelete

  13. // ஆள்வோரே எண்ணி பாரீர்-//

    இதைத் தவறாக(?) புரிந்துகொண்டு வேறெதையோ எண்ணாமல் இருந்தால் சரி.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...