Monday, June 15, 2015

பறித்தாரே அணுவளவும் இரக்க மின்றே பாவிகளாம் அரக்கரென சொல்ல நன்றே!

 

எரித்தார்கள் உயிரோடு என்றச் செய்தி
இதயத்தை இரணமாக்க துயரம் எய்தி!
மரித்தாரும் தந்திட்ட வாக்கு மூலம்
மனம்விட்டு மறையாது நீண்ட காலம்!
முறித்தாராம் எழுத்தாளர் உரிமை மற்றும்
முறையற்ற அச்சத்தால் நீதி அற்றும்!
பறித்தாரே அணுவளவும் இரக்க மின்றே
பாவிகளாம் அரக்கரென சொல்ல நன்றே!


புலவர் சா இராமாநுசம்

16 comments:

  1. எதைப்பற்றி என்று புரியவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராம்மூர்த்தி வர்மா முறைகேடுகள் புரிந்திருப்பதாக பேஸ்புக்கில் செய்திகள் வெளியிட்ட பத்திரிக்கையாளர் ஜிதேந்திர சிங், அதற்கு ஆதாரமான சில புகைப்படங்களையும் பதவியேற்றம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் ஜிதேந்திர சிங் இல்லத்திற்கு சென்ற ஒரு கும்பல் அவரை அடித்து உதைத்து, தீ வைத்து கொளுத்தியது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

      Delete
    2. வேதனையான சம்பவம். விளக்கத்துக்கு நன்றி ஸார்.

      Delete
  2. வணக்கம்
    ஐயா
    கவிதை மனதை கனக்கவைத்து விட்டது.. மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வேதனையான கவிதை
    தமிழ் மணம் முதலாவது
    ஐயா எனது புதிய பதிவு மீனாம்பதி

    ReplyDelete
  4. இதைவிட கொடுமைகளை நாம் சந்திக்கவேணடிய காலம் இது...

    ReplyDelete
  5. எழுத்துச் சுதந்திரம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவது வருத்தப் பட வேண்டிய விஷயம் !

    ReplyDelete
  6. வணக்கம் புலவரே !

    குறைவிலாச் செல்வக் கூட்டில்
    ........குணம்சிறை அடைத்து வைத்தும்
    மறைபொருள் அழித்து மண்ணில்
    ........மனிதனைத் தொலைக்கும் தேசம்
    நிறைபுகழ் தர்மம் என்றே
    ........நித்திலம் அறியும் நாளில்
    கறையுளம் கொண்ட மக்கள்
    ........கருணையை நேசிப் பார்கள் !

    வலிமிகுந்த வரிகள்
    ஐயா

    ReplyDelete
  7. வேதனையான நிகழ்வு. தங்களின் கவிதை அவ்வேதனையை உணர்ந்தோம்.

    ReplyDelete
  8. பணம் பண்ணும் வெறி எல்லா நியாய உணர்வுகளையும் அற்றுப் போகச் செய்கிறது. அழகாக சொல்லியது கவிதை!
    த ம 11

    ReplyDelete