Saturday, June 13, 2015

தீதும் நன்றும் பிறராலே தேடி வாரா! நம்மாலே!



தீதும் நன்றும் பிறராலே
தேடி வாரா! நம்மாலே!
நோதலும் தணிதலும் அவ்வாறே
நவின்றனர் முன்னோர் இவ்வாறே!
சாதலின் இன்னா திலையென்றே
சாற்றிய வள்ளுவர் சொல்ஒன்றே!
ஈதல் இயலா நிலைஎன்றால்
இனிதாம் அதுவும் மிகஎன்றார்!


எல்லா மக்களுக்கும் நலமாமே
என்றும் பணிவாம் குணந்தாமே!
செல்வர் கதுவே பெருஞ்செல்வம்
செப்பிடும் குறளாம் திருச்செல்வம்!
நல்லா ரவரெனப் புகழ்பெற்றே
நாளும் நாளும் வளமுற்றே!
பல்லார் மாட்டும் பண்பாலே
பழகிட வேண்டும் அன்பாலே!

புலவர் சா இராமாநுசம்

7 comments:

  1. அருமையான கவிதை வரிகள் ஐயா
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. எவையுமே நாம் உருவாக்கிக் கொள்வதுதான். தங்களது கவிதை ஆழமாக இதனை உணர்த்தியது. நன்றி.

    ReplyDelete
  3. அருமையான கருத்துள்ள கவிதை! நன்றி ஐயா!

    ReplyDelete
  4. அருமை அய்யா!
    த ம 3

    ReplyDelete
  5. கருத்துள்ள வரிகள் ஐயா...

    ReplyDelete