Friday, June 12, 2015

ஈன்றாள் பசியைக் கண்டாலும்-உம்முடை இதயம் வேதனைக் கொண்டாலும்!



அச்சம் அகற்றி வாழ்வார்க்கு-வேறு
அரணே எதுவும் வேண்டாமே!
இச்சை அடக்கி வாழ்வார்க்கு-ஏதும்
இன்னல் வாரா ஈண்டாமே!
பச்சைக் கீரைக்கும் உப்பின்றி-மிகவும்
பழைய சோற்றுக்கும் வழியின்றி
பிச்சை எடுத்து வாழ்ந்தாலும்-கல்வி
பெற்றிட முனைவது நன்றாகும்!


ஈன்றாள் பசியைக் கண்டாலும்-உம்முடை
இதயம் வேதனைக் கொண்டாலும்!
சான்றோர் பழிக்கும் வினைவேண்டா-எனவும்
சாற்றிய குறளின் வழியிண்டே!
ஆன்றோர் கூறும் நெறிதன்னில்-நன்கு
அறிந்து நடப்பின் துயருன்னில்
தோன்றா வகையில் நிலைதருமே-என்றும்
தோல்வி காணா வளம்பெறுமே!

புலவர் சா இராமாநுசம்

24 comments:

  1. கல்வி பெற்றிட முனைவது நன்றாகும்! இதனை, நம்மை விட கல்வி கொள்ளையர்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் :)

    ReplyDelete
  2. அருமையான விடயம் ஐயா நண்பர் பகவான்ஜி சொல்வதை வழிமொழிகிறேன்.
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. கருத்துள்ள ஆக்கம் ஐயா. பகிர்வுக்கு நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    காலம் உணர்ந்து கவிதை புனைந்த விதம் நன்று ஐயா...த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா
    தங்களின் மின்னஞ்சல் முகவரியை எனது வலைப்பூவின் கருத்து களத்தில் பதிவு செய்யுங்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பதிவு செய்துவிட்டேன்!மிக்க நன்றி!

      Delete
    2. மிக்க நன்றி!

      Delete
  6. நீங்கள் சொல்வது அனைத்தும் சரி ஐயா...

    ReplyDelete
  7. நல்ல கருத்துள்ள பதிவு.

    ReplyDelete
  8. பகவான்ஜி சொல்வதையே நானும வழிமொழிகிறேன்.
    தமிழ் மணம் 8

    ReplyDelete
  9. குறளின் சாரத்தை கவிதையாய் தந்தது அருமை

    ReplyDelete
  10. ஆன்றோர் கூறும் நெறிகளைத் தவிர்ப்பதால்தான் இவ்வாறாக தாழ்ந்த நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறோம். வேதனையே.

    ReplyDelete
  11. இச்சை அடக்கி வாழச் சொல்கிறீர்களே, பெருந்தகையீர், இன்னமும் நிறைவேறாத இச்சைகள் பல உள்ளனவே, என் செய்வது?

    ReplyDelete