Thursday, June 11, 2015

ஐயன் வழிதனில் செல்வீரே அன்பால் உலகை வெல்வீரே!



திரைகடல் ஓடு என்றாரே
திரவியம் தேடு என்றாரே!
குறையிலா வழியில் அதைப்பெற்றே
கொள்கையாய் அறவழி தனைக்கற்றே!
நிறைவுற அளவுடன் நிதிசேர்ப்பீர்
நிம்மதி அதனால் வரும்பார்ப்பீர்!
கறையிலா கரமென புகழ்பெறுவீர்
கண்ணியம் கடமை எனவாழ்வீர்!


வையம் தன்னில் வாழ்வாங்கும்
வாழின்! வாழ்வில் பெயரோங்கும்!
செய்யும் எதையும் தெளிவாகச்
செய்யின் வருவது களிவாகப்!
பொய்யோ புரட்டோ செய்யாமல்
போலியாய் வேடம் போடாமல்!
ஐயன் வழிதனில் செல்வீரே
அன்பால் உலகை வெல்வீரே!

புலவர் சா இராமாநுசம்

16 comments:

  1. தேவையான நேரத்தில்
    தேவையான அறிவுரை
    சொல்லிச் சென்றவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா தங்களின் கவிதை வரிகளை அறிவுரையாய் இனியெனும் ஏற்று நடக்கின்றேன் நன்றியுடன்..
    தமிழ் மணம் இரண்டாவது

    ReplyDelete
  3. குறள் வழிச் சிந்தனைக் கவிதை! நன்றி அய்யா!
    த.ம.3

    ReplyDelete
  4. இனியேனும் ஏற்று நடக்கின்றேன் என்று கில்லர்ஜீயை கூற வைத்ததால், உங்கள் கவிதைக்கு உடனடி பலன் கிடைத்து விட்டது :)

    ReplyDelete
  5. //பொய்யோ புரட்டோ செய்யாமல்
    போலியாய் வேடம் போடாமல்!
    ஐயன் வழிதனில் செல்வீரே
    அன்பால் உலகை வெல்வீரே!
    //

    இன்றைய நிலையில் ரொம்ப கஷ்டம் அய்யா

    ReplyDelete
  6. அறிவுகைக் கவிதை அருமை ஐயா
    தம +1

    ReplyDelete
  7. //பொய்யோ புரட்டோ செய்யாமல்
    போலியாய் வேடம் போடாமல்!
    ஐயன் வழிதனில் செல்வீரே
    அன்பால் உலகை வெல்வீரே!//
    அருமையான வரிகள்.
    த ம 7

    ReplyDelete
  8. அவ்வழி செவ்வழிதான்.

    அருமையான பாடல் ஐயா.

    நன்றி.

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா

    ஒவ்வொரு வரிகளையும் இரசித்து படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. அய்யன் வலை என்றும் சிறந்த வழி...

    ReplyDelete