சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்! அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?
உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ! உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?
புலவர் சா இராமாநுசம்
அன்னையை போற்றும் அழகான கவிதை!
ReplyDeleteத ம 2
மிக்க நன்றி!
Deleteஎன் அன்னைக்கும் பொருந்தும் அருமையான கவிதாஞ்சலி அய்யா !
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteநினைவிலிருந்து நீங்காத அம்மா.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteகண்களைக் குளமாக்கி விட்டீர்கள்.
ReplyDeleteசுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
மிக்க நன்றி!
Deleteமிக்க நன்றி!
ReplyDelete// கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
ReplyDeleteமண்மூடிப் போனாலும் அந்தோ! உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! //
வரிகளைப் படித்ததும், அண்மையில் மறைந்து போன என் அம்மாவை நினைத்து கண் கலங்கினேன். வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.
த.ம.7
அன்னைக்கு பாடிய பாட்டில் பாசமும் நேசமும் பிரிக்க முடியாததாக இருக்கிறது...! அருமை!!
ReplyDeleteத.ம. 8
மனம் கணக்கிறது கவிதை வரிகளால்...
ReplyDeleteஎனது கவிதையையும் காண வாருங்கள்.
தமிழ் மணம் காலையில் முதலாவது.
கவிதையின் முதல் சொல்லே எங்களை ஈர்த்துவிட்டது. பாசத்தை வெளிப்படுத்தும் அருமையான கவிதை.
ReplyDeleteஅன்னையர் தினத்தைத் தங்கள் கவிதையால் சிறப்புச் செய்தவிதம் அருமை ஐயா.
ReplyDeleteஅன்னையர் தினத்தில் அருமையான பா மாலை..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.
ReplyDelete"உண்ணுகின்ற உணவென்ன பார்த்துத் தானே-நான்
ReplyDeleteஉண்டான நாளைமுதலே உண்டுத் தானே!" என
அம்மாவை நினைவில் மீட்டுள்ளீர்கள்!
அருமையான அன்னையர் தின பா வரிகள்! ஐயா!
ReplyDelete