ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்ப்பீரே-மாறிக்
கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
சண்டைகள் தேவையா இனிமேலும்
சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
பாவம் மக்கள் ஊர்தோறும்
நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!
புலவர் சா இராமாநுசம்
Super Ayya
ReplyDeleteT.M 1
மிக்க நன்றி!
Delete
ReplyDeleteஏற்றமது சென்றதுமே குற்றங்களுமே வந்திடுமோ?
பற்றற்ற பணத்தாசை பதவியினை நாடுதய்யா!
குற்றமில்லா ஆட்சியின்று இல்லையென்றே ஆனதய்யா!
தூற்றாததுப்புரவே வேண்டுமய்யா!
நல்ல நயமிகு கவிதை சாடலின் சாரலின் நனைந்தேன் அய்யா!
த ம 3
நட்புடன்,
புதுவை வேலு
ஆஹா. உண்மை. அருமை.
ReplyDeleteதிரு யாதவன் நம்பியின் வரிகளையும் ரசித்து வழிமொழிகிறேன்.
மிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
உண்மையான வரிகள் இரசித்தேன். த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சமூக அக்கறையுள்ள மரபின் குரல்.
ReplyDeleteதொடர்கிறேன் ஐயா!
நன்றி.
மிக்க நன்றி
Deleteஅருமை ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஎந்த ஒரு வாக்குறுதியும் இருக்கையையும், பதவிப்பொறுப்பையும் அபகரிக்கும்வரைதான். அப்புறம் அரசியல்தான் வழக்கம்போல. வரவர இது நமக்கும் பழகிப்போய்விட்டதோ என எண்ணத்தோன்றுகிறது.
ReplyDeleteமேடையேறி பேசும் போது ஆறு போல பேச்சு ,ஆட்சிக் கட்டிலில் ஏறிய பின்னோ பேசியதேல்லாம் ஆறு போல வற்றிப் போச்சு :)
ReplyDelete