விருந்து, உண்ணும் வயதில்லை-நாளும்
விடுமா வேதனை! நோய்தொல்லை!
மருந்தும் உணவாய்ப் போனாலும்-நான்
மனத்தால் இளைஞன்! ஆனாலும்!
இருந்தே எழுதித் வருகின்றேன்-தினம்
இயன்றதை வலைவழி தருகின்றேன்!
வருந்த எனக்கென ஏதுமில்லை-இந்த
வலைதரும் உறவுக்கும் சேதமிலை!
புலவர் சா இராமாநுசம்
சேதமின்றி தொடரட்டும் உங்கள் சேவை அய்யா :)
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteவலையுலக உறவுகளின்
ReplyDeleteமாசற்ற தலைவரே
எங்களுக்கெல்லாம்
வழிகாட்டியாய் விளங்கும்
ஈடு இணையற்ற கவிஞரே
உங்கள் படைப்புகளைக் காணவென்றே
வலையுலகில் இருக்குது ஒரு பெருங்கூட்டம்
சோர்வினைத் துடைத்தெரிவீர்
எமக்கு தொடர்ந்து நல்வாழிகாட்டுவீர்
வாழ்த்துக்களுடன்...
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஅருமை.. தொடருங்கள் ஐயா...
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deletetha.ma 4
ReplyDeleteஆஹா ! அருமை அருமை ! தொடர வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Delete
ReplyDeleteவலைதரும் உறவுக்கும் சேதமிலை! -உமது
விலையில்லாத அன்பிற்கு பேதமில்லை!
வணங்கி மகிழ்கின்றேன்!
த ம 7
நட்புடன்,
புதுவை வேலு
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteபாவலருக்கு முதுமை இல்லை
ReplyDeleteதுள்ளும் இளமை உடன்
கிள்ளிக் கிள்ளித் தாருங்கள்
அள்ளி அள்ளிப் பருகிட
இனிய பாக்களை - என்றும்
வலைவழி உறவுகள் நீளும்!
அருமையாக விளக்கினீர்கள் இன்றைய வாழ்வில் இதை அனைவரும் கடந்தே தீரவேண்டும் ஐயா நாளை நானும் கூட (இருந்தால்)
ReplyDeleteதமிழ் மணம் இரண்டாவது
வருகைக்கு மிக்க நன்றி!
Delete//வலைதரும் உறவுக்கும் சேதமிலை! -உமது
ReplyDeleteவிலையில்லாத அன்பிற்கு பேதமில்லை!//
அருமையான வரிகள்!
த ம 8
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteவலைதரும் உறவுக்கும் சேதமிலை! அய்யா...
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteதொடர்ந்து எழுதுங்கள். தங்களது எழுத்துக்கள் எங்களுக்கு பாடங்களாக உள்ளன. உங்களது அனுபவங்கள் எங்களுக்குத் தேவை. உங்களைத் தொடர்ந்து வருகிறோம்.
ReplyDeleteநேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க அன்போடு அழைக்கிறேன்..
http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html
உடலின் தளர்ச்சியைத் தூக்கிநிறுத்தும் மனத்தின் எழுச்சிமிகு வரிகள். அருமை ஐயா.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteவலைத் தளம் எமக்கு அறிமுகம் செய்து வைத்த அன்பு தெய்வம்! தங்களின் நட்பே நாம் பெற்ற வரம் தான் ஐயா! தங்களின் ஞாபகங்கள் எம்மோடு எப்போதும் கூட வரும் வாழ்த்தும் வயதில்லைத் தங்களை
ReplyDeleteவணங்குகின்றேன் அன்பு மகள் நானும் !
வருகைக்கு மிக்க நன்றி!
Delete