ஓடி,ஓய்வெனில் விளையாடு!-தமிழ்
உணர்வை ஊட்டி நீயாடு!
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல,
பண்பை என்றும் நீநாடு!
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப்
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு!
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
கொள்கையைக் காக்கத் தயங்காதே!
இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு
எண்ணி எதையும் செய்வாயே!
செயற்கையைத் தேடி அலையாதே-நம்
செந்தமிழ் பேச மறக்காதே!
முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
முயன்றால் வெற்றி அவ்வினையாம்
அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே!
ஒவ்வொர் நாளும் விளையாடு!-பழுது
உரிமைக்கு வந்தால் போராடு!
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர்
ஏய்க வந்தால் நீசாடு
இவ்வழிப் போற்றி விளையாடு-எனில்
என்றும் வாரா ஒருகேடு
செவ்வழி இவையே நலங்காண-பிறர்
செப்பிடப் பெருமை உளம்பூண
புலவர் சா இராமாநுசம்
//முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
ReplyDeleteமுயன்றால் வெற்றி அவ்வினையாம்
அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே!//
நல்ல வரிகள்!
த ம 2
நன்றி!
Deleteஅய்யா தங்கள் தளத்தில் என்னால் வாக்களிக்க முடியவில்லை. பல முறை முயற்சித்தும் முடியவில்லை.
ReplyDeleteநன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா.
கவிதை அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
"இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு
ReplyDeleteஎண்ணி எதையும் செய்வாயே!
செயற்கையைத் தேடி அலையாதே-நம்
செந்தமிழ் பேச மறக்காதே!" என்பதையே
நானும் கூறிவைக்க விரும்புகின்றேன்!
அருமை ஐயா நம்பிக்கையை விதைக்கும் வைர வரிகள்.
ReplyDeleteதமிழ் மணம் முதலாவது.
#கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
ReplyDeleteகொள்கையைக் காக்கத் தயங்காதே!#
உங்கள் வரிகளைப் படித்து ,அதன்படி முயன்று த ம வாக்கைப் போட்டுட்டேன் :)
நன்றி!
Delete//முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
ReplyDeleteமுயன்றால் வெற்றி அவ்வினையாம்//
அனைவரும் மனதில் பதிய வைக்கவேண்டிய வரிகள்
அருமை ஐயா
நன்றி!
Deleteசெந்தமிழ் பேச மறக்காதே!
ReplyDeleteமுயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
முயன்றால் வெற்றி அவ்வினையாம்
உண்மை அருமை ஐயா
நன்றி
தம +1
நன்றி!
Deleteஉயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் உயர் கவிதை. எனினும் ' உண்மை பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு' என்னும் வரிகள் இன்றைய அரசியல் சூழலில் ஒத்துவருமா என்ற ஐயம் எழுகிறதே! -இராய செல்லப்பா
ReplyDeleteநன்றி!
Deleteஉயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் உயர் கவிதை. எனினும் ' உண்மை பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு' என்னும் வரிகள் இன்றைய அரசியல் சூழலில் ஒத்துவருமா என்ற ஐயம் எழுகிறதே! -இராய செல்லப்பா
ReplyDelete// இயற்கையை பேணிக் காப்பாயே - நன்கு
ReplyDeleteஎண்ணி எதையும் செய்வாயே...! //
சிறப்பான வரிகள் ஐயா...
நல்ல வழியை நாடும்படி கூறும் தங்களின் அறிவுரை மிகவும் பொருத்தமானது. தற்போதைக்குத் தேவையானது.
ReplyDeleteநன்றி!
Delete"செயற்கையைத் தேடி அலையாதே-நம்
ReplyDeleteசெந்தமிழ் பேச மறக்காதே!"
செந்தமிழை நினைவில் கொள்வோம்
செம்மையுடன் செயல்படுவோம்
(அய்யா! குழலின்னிசையும் அருள்கூர்ந்து நினைவு கொள்ள வேண்டுகிறேன். நன்றி)
த ம + 1
நட்புடன்,
புதுவை வேலு