மட்டைப் பந்து விளையாட்டே –ஏனோ
மட்டுமா நமது விளையாட்டே!
திட்ட மிட்டே ஆடுகின்றார்- பொருளைத்
தேடிட சூதையும் நாடுகின்றார்!
வெட்ட வெளிச்சம் ஆயிற்றே- முன்னால்
விளைவும் மறந்து போயிற்றே!
கொட்டிக் குவிந்திட பணமதிலே- பலர்
கொடிகட்டி பறப்பதோ தினமதிலே!
கூடிப் பார்த்திட பெருங்கூட்டம் –அதில்
குறைநிறை பேசிட ஒருகூட்டம்!
வாடிக்கை ஆனது இன்றிங்கே –நாளும்
வளர்ந்தால் வருமா நன்றெங்கே!
ஆடிடப் பணமும் பெறுகின்றார்-விளம்பரம்
அளித்திட அள்ளியும் தருகின்றார்!
வாடிடும் பல்வகை விளையாட்டே- அவையும்
வாழ்ந்திடச் செய்வீர் நம்நாட்டே!
புலவர் சா இராமாநுசம்
தீர வேண்டிய மோகம்...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteஐ.பி.எல். முடிந்த நிலையில் இப்படி ஒரு கவிதையா..! ஏதோ ஒரு அணியை தாக்குவது போல் தெரிகிறது. சூழலுக்கு ஏற்ற கவிதை.
ReplyDeleteத ம 3
இது மோகம் தீராத...மோகம்...அய்யா....
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteஇதைதான் சாய்ந்தா சாய்ந்த பக்கம் சாயும் .............என்கிறார்களோ :)
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteஉண்மை. கிரிக்கட் மோகம் எப்போது தீருமோ...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா.
தீர வாய்ப்பு இல்லலை.. உலக கிண்ண மட்டைப்பந்து விளையாட்டு நடந்த போது இந்தியா தோல்வியடைந்து விட்டது என்ற தகவல் அறிந்ததும் நாக்கை அறுத்து கொண்ட இரசிகர்களும் அங்குதான்... அருமையாக சொல்லியுள்ளீர்கள் த.ம 8
இது சம்மந்தமாக முத்து நிலவன் ஐயா ஒருகட்டுரை எழுதியுள்ளார் பல எதிர்ப்புக்கள் வந்தது.. ஐயா.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteஅறியாமைவாதிகளே இதற்கெல்லாம் காரணம் ஐயா அழகாக சாடியுள்ளீர்கள்.
ReplyDeleteதமிழ் மணம் இரண்டாவது.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteபட்டுப் போன மட்டைக்கும்
ReplyDeleteபணத்தைக் கட்டும் உலகத்தில்
கட்டுக் கடங்கா களவாட்டம்
காண்போர் மனதில் திண்டாட்டம்
எட்டாக் கனியாய் ஏழைக்கும்
இருக்கு திந்தத் துடுப்பாட்டம்
தட்டிக் கேட்க்க யாரிருக்கார்
தலைவன் கூடச் சூதாடி !
அருமையான கவிதை புலவர் ஐயா
வாழ்க வளமுடன்
தம +1
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteவிலையாகி போன விளையாட்டை
ReplyDeleteகலையான கவிதை மூலம்
சாடல் கண்டேன்!
அருமை அய்யா!
தம 10
நட்புடன்,
புதுவை வேலு
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteஇது விளையாட்டல்ல, வியாபாரம். அழகான கவிதை வரிகளால் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteகிரிக்கெட் வணிகமயமாகிவிட்டது ஐயா
ReplyDeleteதம +1
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteதிட்ட மிட்டே ஆடுகின்றார்- பொருளைத்
ReplyDeleteதேடிட சூதையும் நாடுகின்றார்!
ஆடிடப் பணமும் பெறுகின்றார்-விளம்பரம்
அளித்திட அள்ளியும் தருகின்றார்!
இப்படித் தான்:
மட்டைப் பந்து விளையாட்டே –ஏனோ
மட்டுமா நமது விளையாட்டே!
நடை போடுகிறது...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Delete