அனல்காற்று நாள்தோறும் தாங்காத வெய்யில்-
ஐயகோ வழிவதும் தண்ணீரோ மெய்யில்!
புனல்கூட சுடுகிறது தொட்டாலே எங்கும்-அதனால்
புல்பூண்டும் கரிகிவிட வெம்மையது பொங்கும்!
மனம்நோக மாவினமும் பசியாலே வாடும்- வான்
மழையின்றி உயிர்வாழ்தல் எவ்வண்ணம் கூடும்!
தினம்போல இயற்கைதனை அழித்தோமே அன்றோ-செய்த
தீவினையால் இந்நிலையைப் பொற்றோமே இன்றோ!
பருவங்கள் பொய்யாகி மழைமாறிப் போகும்-மேலும்
பாழாக விளைநிலமும் பயிரின்றி ஆகும்!
கருமேகம் வந்தாலும் பலனின்றி செல்ல-கண்டே
கண்ணீரில் விவசாயி குடும்பமே தள்ள!
உருவாகும் புயலாலே அழிவேதான் மிஞ்சும்-என்றே
உலகெங்கும் நாள்தோறும் வரும்செய்தி! துஞ்சும்,!
ஒருவாறு நாமறிய அறிவிப்பே! காண்பீர்! –உடன்
உணர்தினி இயற்கையைக் காத்திடப் பூண்பீர்!
சொய்வோமா!!!?
புலவர் சா இராமாநுசம்
கேட்பார் நாதியில்லையென்றால்.இந்த வுலகத்தையும் அழிப்பாரே...
ReplyDeleteஇயற்கையை நாம் வஞ்சித்தோம். இப்போது இயற்கை நம்மை வஞ்சிக்க தொடங்கியுள்ளது, என்பதை விளக்கும் கவிதை.
ReplyDeleteத ம 3
நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteசமுக விழிப்புணர்வு கவிதை.. எல்லாம் தொழில் சாலைகளின் வளர்ச்சி...
பகிர்வுக்கு நன்றி த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி!
Deleteஇயற்க்கைகு செய்த துரோகத்தின் தண்டணையை நான் ஏற்றே தீரவேண்டுமே ஐயா.
ReplyDeleteதமிழ் மணம் நான்காவது காலையில்
நன்றி!
ReplyDeleteஇயற்கையை அழித்துக் கொண்டே வருவதன் பலன் ஐயா
ReplyDeleteஇருந்தும் நாம் இன்னும் பாடம் கற்க மறுத்து வருகிறோம்
தம +1
ஒவ்வொன்றும் உண்மை தான் ஐயா...
ReplyDeleteதங்களின் தமிழைத் தொடர்கிறேன்.
ReplyDeleteஆர்வத்துடன்.
நன்றி.
வஞ்சனைத் தொடந்தால் தாகத்துக்கு தண்ணீரும் கிடைக்காத நிலை ஏற்படும் ,உணர்வது எப்போது ?
ReplyDeleteஇயற்கையை அழிக்க நினைத்து நாமே அழிந்து போகிறோம்.....
ReplyDeleteஇப்போதாவது மனிதர்களுக்குப் புரிந்தால் நல்லது.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்?!
ReplyDelete