எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன் –வீணில்
இதயத்தில் சுமையே சேர்க்கின்றேன்!
கண்ணியம் அறவே காணவில்லை-பெற்ற
கடனை மறுக்க நாணவில்லை!
புண்ணியம் பாவம் பார்ப்தெவர்?- பெரும்
பொருளைத் தேடவே முயலாதவர்!
மண்ணிலே பிழைக்கத் தெரியாதவர்-என்றே
மக்கள் நினைப்பதை அறியாதவர்!
குடிப்பதும் பெருமை ஆயிற்றாம் –என்ற
கொடுமை நிலையாய் போயிற்றாம்!
படிப்பதும் விற்பனைப் பொருளாகும்-வசதி
படைத்தவர் இன்றெனில் இருளாகும்!
வெடிப்பது ஏழைகள் நெஞ்சம்தான் –ஏற்ற
விலைதரும் எவர்க்கும் மஞ்சம்தான் !
துடிப்பது இழந்த தோணியென-வாழ்வைத்
தொலைத்தவன் இருப்பதா!? கோழையென!?
புலவர் சா இராமாநுசம்
அருமையான தன்னம்பிக்கை தரும் கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
கவிதையின் வரிகள் மிக அழகு இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி. த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteவரிகளில் இன்றைய உண்மைகள் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஇன்றைய யதார்த்த நிலை ஐயா
ReplyDeleteதம +1
//குடிப்பதும் பெருமை ஆயிற்றாம் –என்ற
ReplyDeleteகொடுமை நிலையாய் போயிற்றாம்!
படிப்பதும் விற்பனைப் பொருளாகும்-வசதி
படைத்தவர் இன்றெனில் இருளாகும்!//
காலத்துக்கு ஏற்ற வரிகள் அய்யா!
தொடர்கிறேன்.
த ம 5
#துடிப்பது இழந்த தோணியென#
ReplyDeleteதுடிப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தும் தோணியை நினைவு படுத்துவதும் பொருத்தமே !
மிக்க நன்றி
Deleteகுடிப்பதும் பெருமை ஆயிற்றாம்
ReplyDeleteபடிப்பதும் விற்பனைப் பொருளாம்
வெடிப்பது ஏழைகள் நெஞ்சம்தான்
முடிப்பது எவர் கதையைத் தான்...
எப்ப தான் மாறும் இந்த நிலை!
மிக்க நன்றி
Deleteநம்பிக்கையான கருத்துகள் அடங்கிய கவிதை ஐயா...
ReplyDeleteதமிழ் மணத்தில் நுழைக்க - 7
மிக்க நன்றி
Deleteகாலத்தின் ஜாலத்தை
ReplyDeleteகவின்மிகு வரிகளால்
கவர்ந்து சென்ற
கவிதை அய்யா!
சிறப்பான தன்னம்பிக்கை உற்று!
த ம = நவரத்தினமாய் ஜொலிக்க 7
நட்புடன்,
புதுவை வேலு
தவறுக்கு வருந்துகிறேன்!
ReplyDeleteத ம 9
நட்புடன்,
புதுவை வேலு
மிக்க நன்றி
Delete