Friday, May 22, 2015

போதுமடா சாமி-நாங்க பொழைக்க வழி காமி!



போதுமடா சாமி-நாங்க
பொழைக்க வழி காமி!
தீது மலிந்து போச்சே-இந்து
தேச மெங்கும் ஆச்சே!
சாதி சண்டை நீங்க-நல்
சமத் துவமே ஒங்க!
பீதி போக நாங்க-நாளும்
பிழைக்க வழி தாங்க!


ஊற்று போல ஊழல்-இங்கே
ஊறி வரும் சூழல்!
மாற்ற வேண்டும் சாமி-உடன்
மாற்ற வாரும் பூமி!
போற்று வோமே வந்தே-நீர்
பதுமை பலவும் தந்தே!
ஆற்றும் உங்கள் பணியே-மேலும்
அழிக்க வேண்டும் பிணியே!

புலவர் சா இராமாநுசம்

28 comments:

  1. நேர்மையாக பிழைக்கும் வழி பிறக்க வேண்டும்...

    ReplyDelete
  2. குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன்

    ReplyDelete
  3. அருமையான கவிதை ஐயா

    ReplyDelete
  4. நாட்டின் நடப்பை உணர்த்தும் -கவி
    ஓட்டினால் ஒடுக்கும் புவி!
    வாட்டி வதைக்கும் வறுமை-நீங்கி
    வளர்க நாடு ஓங்கி!
    த ம 4
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  5. பொருள் பொதிந்த அருமையான கவிதை.நன்றி !

    ReplyDelete
  6. கவலை வேண்டாம் ஐயா விதைகள் என்றோ
    முளைக்கத் தொடங்கிவிட்டது
    விரைவில்
    நற்செய்திகள் வருமிங்கே!
    சமூகமாற்றம்
    சமத்துவமேயென்று,,,

    ReplyDelete
  7. கற்காலத்திற்கு இட்டுச்செல்லும் தற்கால நிலையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  8. தங்கள் புலமை சமூக நலனிற்குப் பயன்படுகின்றமை எண்ணி மகிழ்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  9. #மாற்ற வேண்டும் சாமி-உடன்
    மாற்ற வாரும் பூமி!#
    அவர் வருவாரா :)

    ReplyDelete
  10. சாமியே... பணக்காரர் பக்கம்தான் இருக்கிறது.இந்தச்சாமி ஏழைக்கு எங்க வழி காட்டப் போகுது...????

    ReplyDelete
  11. வணக்கம்
    ஐயா
    கவிதையின் பாடு பொருள் நன்று பாடி மகிழ்ந்தேன்
    த.ம10

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. தங்களின் சோகம் நியாமானதே. வழிகாட்டவேண்டிய தலைவர்கள், தாங்களே வழிதெரியாமல் திகைத்துக்கொண்டிருக்கிறார்களோ என்று அஞ்சுகிறேன். எனினும் காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நல்லது நடக்கும்! - இராய செல்லப்பா சென்னை.

    ReplyDelete
  13. அருமை ஐயா..நன்றி தம +1

    ReplyDelete
  14. போதுமடா சாமி-நாங்க
    பொழைக்க வழி காமி!
    தீது எல்லாம் விலகி
    நல் சூழல் வந்திட - நாளும்
    பிழைக்க வழி தாங்க!

    ReplyDelete