Wednesday, May 20, 2015

மனிதா மனிதா அறிந்தாயா-ஒருநாள் மரணம் உண்டெனத் தெரிந்தாயா!



மனிதா மனிதா அறிந்தாயா-ஒருநாள்
மரணம் உண்டெனத் தெரிந்தாயா!
இனிதாய் இருப்பதும் இவ்வுலகே-தீரா
இன்னல் தருவதும் இவ்வுலகே!
புனிதா என்றே போற்றுவதும்-பெரும்
பொய்யன் என்று தூற்றுவதும்!
நனிதா! அல்ல! நடைமுறையே –என்றும்
நம்மிடைய உள்ள பெருங்குறையே!


ஏனோ வீணில் அலைகின்றாய் –நாளும்
எதற்கே உள்ளம் குலைகின்றாய்!
தேனாய் இனிப்பதும் சிலநேரம் –கடும்
தேளாய் கொட்டும் சிலநேரம்!
தானாய் அறிவதும் உண்டாமே-செல்லும்
தடமது ஆய்ந்து கொண்டாமே!
போனால் புகழ்வரும் ஒன்றாமே –இதுவே
புரிந்தால் வாழ்வே நன்றாமே!!

புலவர் சா இராமாநுசம்

21 comments:

  1. அன்புள்ள அய்யா,

    ‘மனிதா மனிதா அறிந்தாயா-ஒருநாள் மரணம் உண்டெனத் தெரிந்தாயா!’ - என்று மரணிக்குமுன் மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல பல கருத்துகள் சொன்னீர்கள். அருமை.

    த.ம. 1.

    ReplyDelete
  2. பிறப்பு ஒன்று உண்டென்றால்..இறப்பு ஒன்று இருக்கும்என்பது- இயற்கையின் விதியாச்சே..அய்யா...

    ReplyDelete
  3. பொருண்மொழிக்காஞ்சியாய் மரபிலிருந்து ஒரு பாடல்....!

    அருமை ஐயா!

    நன்றி.

    ReplyDelete
  4. அருமை ஐயா இறைவனைத் தொழுபவன் கண்டிப்பாக உணர வேண்டும்
    தமிழ் மணம் மூண்றாவது
    .

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா
    இதைஎல்லாமனிதர்களும் புரிந்து கொள்வார்கள் என்றால் பூமியில் பிரச்சினை ஏது அருமையாக உள்ளது வரிகள்பகிர்வுக்கு நன்றி த.ம 5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. இனிதே இனிதே கவி அய்யா!
    மனித குலத்தின் பொருள் அய்யா!
    சரணம் சொல்லி தாள் படிந்தாலும்
    மரணம் தள்ளி போகாது அய்யா!
    த ம 5
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  7. மரணமில்லாப் பெருவாழ்வுக் கல்லவோ நான் இச்சை கொண்டேன்.

    ReplyDelete
  8. எவ்வளவு உண்மை கவிதை அருமையாக உள்ளது. எத்தனை பொருள் புதைந்த கவிதை . பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வாழும் கலையை கவிதையில் கண்டேன் அய்யா !

    ReplyDelete
  10. சிறப்பாகச் சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
  11. சிறந்த கோட்பாடுகளை முன்வைத்தீர்கள்
    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete