மனிதா மனிதா அறிந்தாயா-ஒருநாள்
மரணம் உண்டெனத் தெரிந்தாயா!
இனிதாய் இருப்பதும் இவ்வுலகே-தீரா
இன்னல் தருவதும் இவ்வுலகே!
புனிதா என்றே போற்றுவதும்-பெரும்
பொய்யன் என்று தூற்றுவதும்!
நனிதா! அல்ல! நடைமுறையே –என்றும்
நம்மிடைய உள்ள பெருங்குறையே!
ஏனோ வீணில் அலைகின்றாய் –நாளும்
எதற்கே உள்ளம் குலைகின்றாய்!
தேனாய் இனிப்பதும் சிலநேரம் –கடும்
தேளாய் கொட்டும் சிலநேரம்!
தானாய் அறிவதும் உண்டாமே-செல்லும்
தடமது ஆய்ந்து கொண்டாமே!
போனால் புகழ்வரும் ஒன்றாமே –இதுவே
புரிந்தால் வாழ்வே நன்றாமே!!
புலவர் சா இராமாநுசம்
அன்புள்ள அய்யா,
ReplyDelete‘மனிதா மனிதா அறிந்தாயா-ஒருநாள் மரணம் உண்டெனத் தெரிந்தாயா!’ - என்று மரணிக்குமுன் மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல பல கருத்துகள் சொன்னீர்கள். அருமை.
த.ம. 1.
நன்றி!
Deleteபிறப்பு ஒன்று உண்டென்றால்..இறப்பு ஒன்று இருக்கும்என்பது- இயற்கையின் விதியாச்சே..அய்யா...
ReplyDeleteநன்றி!
Deleteத.ம.1
ReplyDeleteநன்றி!
Deleteபொருண்மொழிக்காஞ்சியாய் மரபிலிருந்து ஒரு பாடல்....!
ReplyDeleteஅருமை ஐயா!
நன்றி.
நன்றி!
Deleteஅருமை ஐயா இறைவனைத் தொழுபவன் கண்டிப்பாக உணர வேண்டும்
ReplyDeleteதமிழ் மணம் மூண்றாவது
.
நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
இதைஎல்லாமனிதர்களும் புரிந்து கொள்வார்கள் என்றால் பூமியில் பிரச்சினை ஏது அருமையாக உள்ளது வரிகள்பகிர்வுக்கு நன்றி த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி!
Deleteஇனிதே இனிதே கவி அய்யா!
ReplyDeleteமனித குலத்தின் பொருள் அய்யா!
சரணம் சொல்லி தாள் படிந்தாலும்
மரணம் தள்ளி போகாது அய்யா!
த ம 5
நட்புடன்,
புதுவை வேலு
மரணமில்லாப் பெருவாழ்வுக் கல்லவோ நான் இச்சை கொண்டேன்.
ReplyDeleteநன்றி!
Deleteஎவ்வளவு உண்மை கவிதை அருமையாக உள்ளது. எத்தனை பொருள் புதைந்த கவிதை . பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி!
Deleteவாழும் கலையை கவிதையில் கண்டேன் அய்யா !
ReplyDeleteநன்றி!
Deleteசிறப்பாகச் சொன்னீர்கள் ஐயா...
ReplyDeleteசிறந்த கோட்பாடுகளை முன்வைத்தீர்கள்
ReplyDeleteசிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்