முள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம்
முழுவதும் வாழும் தமிழர்இனம்!
உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த
உறவுகள் தம்மைத் தொழுவாராம்!
கொள்ளி வைக்கவும் ஆளின்றே –அவர்
குடும்பமே அழிந்த நாளின்றே!
சொல்லி ஆற்றாத் துயரன்றோ- போனது
சொல்லிட இயலா உயிரன்றோ!
தேதி இன்று பதினெட்டே –இந்த,
தேதியில் அந்தோ !மதிகெட்டே!
நீதியில் படுகொலை நடந்ததுவே –என்றும்
நீங்காத் துயரொடு கடந்தனவே!
வீதியில் பிணங்கள் சிதறிடவும்-ஈழம்
வேதனைப் பொங்கக் கதறிடவும்!
பீதியில் இன்றுமே! வாழ்கின்றார் –பலமுறைப்
பேசியும் பயனிலை என்கின்றார்!
புலவர் சா இராமாநுசம்
வேதனை தீரும் நாள் விரைவில் வர வேண்டுகிறேன் ஐயா...
ReplyDeleteமுதல் வருகைக்கு மிக்க நன்றி!
Deleteநல்ல காலங்கள் பிறக்கவேண்டும்....தம +1
ReplyDeleteவேதனைகள் தீரும் ஒரு நாள் வரமாலா போயவிடும்......
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteவேதனை நிறைந்த வரிகள் ஐயா இறந்தோரை இன்றாவது நினைவு கூர்வோம்
ReplyDeleteதமிழ் மணம் 3
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஅந்நாளை நினைவுகூர்ந்து பகிர்ந்தமைக்கு நன்றி. நன்னாளை எதிர்பார்ப்போம்.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteஅந்த கொடியோர்களுக்கு கொள்ளிவைக்கும் நாள் இன்னும் வரவில்லையே என்பதே என் வருத்தம் !
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Delete"தேதி இன்று பதினெட்டே –இந்த,
ReplyDeleteதேதியில் அந்தோ !மதிகெட்டே!
நீதியில் படுகொலை நடந்ததுவே –என்றும்
நீங்காத் துயரொடு கடந்தனவே!" என
நினைவூட்டினீர்கள் - நானும்
அங்கே, அப்போது
பல முறை செத்து உயிர்த்தேன்...
ஐ.நா. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை
அங்கீகரிக்க வேண்டுகிறேன்!
வருகைக்கு மிக்க நன்றி!
Delete