Thursday, May 14, 2015

நிதியிருந்தால் நீதிவிலை போகும் என்றே-மக்கள் நினைக்கின்றார்! ஐயகோ ! இதுவா? நன்றே


நிதியிருந்தால் நீதிவிலை போகும் என்றே-மக்கள்
நினைக்கின்றார்! ஐயகோ ! இதுவா? நன்றே
கதியில்லார் என்செய்வர்! காலம் முழுதும் –வற்றாக்
கண்ணீரே கதியென்று கதறி அழுதும்
விதியென்று வாடுவதும் அறமா!? ஆகும் –அவர்
விடுதலைக்கு ஏதுவழி! உயிர்தான் போகும்
மதியிழந்தோம் நாமெனவும் இதுவே சாட்சி –வீணில்
மக்களாட்சி என்பதெல்லாம் கனவுக் காட்சி


புலவர் சா இராமாநுசம்

15 comments:

  1. வணக்கம்
    ஐயா
    காலம் உணர்ந்து கவி படிய விதம் நன்று த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மனசாட்சி இல்லாத மக்களாட்சி
    மடியட்டும் மண்ணை விட்டு!
    படியளக்கும் குடியாட்சி மலரட்டும்
    படிப்பறிவோடு சிறந்து இன்று!
    தம 2

    "மக்களாட்சி என்பதெல்லாம் கனவுக் காட்சி"
    நெஞ்சை தொட்ட நெருடல் வரிகள்! அருமை அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

  3. கடைசி வரி அருமை ஐயா. கனவு நனவாகுவது எப்போது என்பதுதான் தெரியவில்லை.

    ReplyDelete
  4. மக்களாட்சி என்பதெல்லாம் கனவுக் காட்சி த.ம.1

    ReplyDelete
  5. இங்கு நடப்பது ஜனநாயகம்இல்லை ,பணநாயகம் :)

    ReplyDelete
  6. இதுதான் அரசியல். இந்த சூழலை நாம் எதிர்கொண்டாக வேண்டும் என்பதே நம் விதி.

    ReplyDelete
  7. மிக்க நன்றி!

    ReplyDelete
  8. பொருத்தமான வரிகள் ஐயா தமிழ் மணம் 7

    ReplyDelete