நான், உடல் நலன் பெற வேண்டி, விரும்பி வாழ்த்திய, வலையுலக,முகநூல் உறவுகள் அனைவருக்கும் முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு பின் வரும் பதிவை காணிக்கை
ஆக்குகிறேன்.வணக்கம்!
அப்பாவித் தமிழர்களைச் சுட்டுக் கென்றாய்
அடப்பாவி ஆந்திரனே திருடன் என்றாய்
தப்பானக் கணக்கதுவே அறிந்து கொள்வாய்
தப்பிக்க பொய்கதையே கட்டிச் சொல்வாய்
இப்போதும் கேட்கின்றோம் எய்தோர் யாராம்
எதற்காக அம்புதனை கொய்தீர் நீராம்
துப்பேது அதைச்சொல்ல தகுதி யின்றே
துரோகிகளை மறைப்பதற்கா கொன்றீர் இன்றே
ஒப்பாது இவ்வுலகக் கொடுமை! இதனை
உணர்ந்தீரா? இனியேனும் மாற்ற அதனை
செப்பாது பொய்யேதும் செய்த பாவம்
செம்மையுற ஏற்றவழி ஆய்ந்து மேவும்
எப்போதும் தீராத பழியாம் இதுவே
என்றெண்ணி செயல்படுவீர்! இன்றேல் அதுவே
துப்பாக்கி ஆகியுமைச் சுட்டு விடுமே
துரோகிகளின் கடத்தல்தான் பெருக! கெடுமே
புலவர் சா இராமாநுசம்
நலம் பெற்று வலைத்தளம் வந்தமை கண்டு பெரிதும் மகிழ்வு அய்யா!
ReplyDeleteதொடரட்டும் தங்களின் தமிழ்ச்சமூகப் பணி.
நன்றி.
புலவர் அய்யா அவர்களே
ReplyDeleteநலம் தரும் நல்வாழ்வு
காண்பீர் அய்யா!
"இப்போதும் கேட்கின்றோம் எய்தோர் யாராம்
எதற்காக அம்புதனை கொய்தீர் நீராம்?"
சவுக்கினை சுற்றிய சாட்டை வரிகள்
உரிக்கட்டும் நரித்தனம் உடையவர் தோளினை!
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி!
Deleteநலந்தரும் நல்வாக்கு 2 (த ம)
ReplyDeleteநட்புடன்,
புதுவை வேலு
நன்றி!
Deleteமீண்டும் பதிவுலகம் வந்தமைக்கு நல்வரவு ஐயா அருமையான சவுக்கடி வார்த்தைகள் தொடரட்டும் தங்களின் தொண்டு.
ReplyDeleteதமிழ் மணம் முதலிலேயே போட்டு விட்டேன்.
நன்றி!
Deleteதாங்கள் உடல் நலம் பெற்றமை கண்டு மகிழ்கின்றேன் அய்யா
ReplyDeleteநன்றி
தம +1
நன்றி!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா தங்களின் உடல் நலம் குணமாகி மீண்டு கவியுடன் கண்டது மகிழ்ச்சி ஐயா த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உடல் நலம் சீரானது அறிந்து மகிழ்ச்சி. தொடர்ந்து தங்களது பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்.
ReplyDeleteஎண்சீர் விருத்தம் சொல்லும் வருத்த வரிகள் நம்முடைய ஆதங்கத்தை அப்படியே படம் பிடித்து காட்டிவிட்டது ஐயா.
ReplyDeleteஉடல் நலம் பெற்று மீண்டும் பதிவுலகம் வந்தமைக்கு வாழ்த்துகள்.....
ReplyDeleteஆந்திர நிகழ்வு - மனம் ரணம்.....