Sunday, March 8, 2015

திருவாகி இவ்வுலகே ஏற்றம் காணும் –மகளிர் தினமான இன்றிதனைப் போற்ற வேணும்!


அர்த்தநாரி ஆண்டவனே உடலைத் தந்தான் –எதற்கு????
ஆய்வதற்கா!?! அவதாரம் எடுத்து வந்தான்
சரிபாதி பெண்களென உணர்த்தத் தானே –இதனை
சரியாகப் புரிதலில்லா ஆண்கள் வீணே!
மறுபாதி பெண்களென உரிமைத் தருவீர்-வாழ்வில்
மட்டற்ற மகிழ்வினையே என்றும் பெறுவீர்
திருவாகி இவ்வுலகே ஏற்றம் காணும் –மகளிர்
தினமான இன்றிதனைப் போற்ற வேணும்


தோன்றியநாள் முதலாக அடிமை யாக்கி –வாழத்
துணையாக வந்தவளின் துயரைப் போக்கி
சான்றெனவே ஆண்மக்கள் விளங்க யாண்டும்- எதிலும்
சமபங்குப் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்
ஊன்றுக்கோல் ஒருவர்க்கு ஒருவர் ஆமே –என்ற
உண்மைதனை இருவருமே உணர்ந்து தாமே
ஆன்றோரின் அறவழியே நடந்து வாழ்க!-மகளிர்
அனைவருக்கும் என்றென்றும் இன்பம் சூழ்க!

புலவர் சா இராமாநுசம்

17 comments:

  1. அன்புள்ள அய்யா,

    உலக மகளிர் தினத்தில்
    உலவ விட்ட கவிதை
    பெண்ணின் பெருமை கூறியே
    கண்ணின் இமையாய்க் காக்கும்!
    நன்றி.
    த.ம. 1.

    ReplyDelete
  2. ஆன்றோரின் அறவழியே நடந்து வாழ்க!-மகளிர்
    அனைவருக்கும் என்றென்றும் இன்பம் சூழ்க!
    தம 2

    ReplyDelete
  3. என்றுமே போற்றுவோம் ஐயா...

    ReplyDelete
  4. மிக்க நன்றி

    ReplyDelete
  5. பெண்கள் தினத்தன்று அருமையான வித்தியாசமான கவிதை !!

    ReplyDelete
  6. பெண்களைப்போற்றிய கவி அருமை சக்தி இல்லையேல் சிவம் இல்லை
    இனிய மதளிர் தின வாழ்த்துகள்
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  7. சிந்திக்க வேண்டிய நாளில்
    சிந்திக்க வைக்கும் பதிவு

    ReplyDelete
  8. அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா..நன்றி

    ReplyDelete
  9. அழகான தமிழில், மகளிரை போற்றும் அருமையான கவிதை...

    வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  10. போற்றவும் வேண்டாம் தூற்றவும் வேண்டாம். ஐயா தாங்கள் சொல்வது போல ஒருவருக்கொருவர் துணையாக இருந்தாலே போதும்.

    ReplyDelete
  11. மிக்க நன்றி

    ReplyDelete