அர்த்தநாரி ஆண்டவனே உடலைத் தந்தான் –எதற்கு????
ஆய்வதற்கா!?! அவதாரம் எடுத்து வந்தான்
சரிபாதி பெண்களென உணர்த்தத் தானே –இதனை
சரியாகப் புரிதலில்லா ஆண்கள் வீணே!
மறுபாதி பெண்களென உரிமைத் தருவீர்-வாழ்வில்
மட்டற்ற மகிழ்வினையே என்றும் பெறுவீர்
திருவாகி இவ்வுலகே ஏற்றம் காணும் –மகளிர்
தினமான இன்றிதனைப் போற்ற வேணும்
தோன்றியநாள் முதலாக அடிமை யாக்கி –வாழத்
துணையாக வந்தவளின் துயரைப் போக்கி
சான்றெனவே ஆண்மக்கள் விளங்க யாண்டும்- எதிலும்
சமபங்குப் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்
ஊன்றுக்கோல் ஒருவர்க்கு ஒருவர் ஆமே –என்ற
உண்மைதனை இருவருமே உணர்ந்து தாமே
ஆன்றோரின் அறவழியே நடந்து வாழ்க!-மகளிர்
அனைவருக்கும் என்றென்றும் இன்பம் சூழ்க!
புலவர் சா இராமாநுசம்
அன்புள்ள அய்யா,
ReplyDeleteஉலக மகளிர் தினத்தில்
உலவ விட்ட கவிதை
பெண்ணின் பெருமை கூறியே
கண்ணின் இமையாய்க் காக்கும்!
நன்றி.
த.ம. 1.
மிக்க நன்றி!
Deleteஆன்றோரின் அறவழியே நடந்து வாழ்க!-மகளிர்
ReplyDeleteஅனைவருக்கும் என்றென்றும் இன்பம் சூழ்க!
தம 2
என்றுமே போற்றுவோம் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteபெண்கள் தினத்தன்று அருமையான வித்தியாசமான கவிதை !!
ReplyDeleteபெண்களைப்போற்றிய கவி அருமை சக்தி இல்லையேல் சிவம் இல்லை
ReplyDeleteஇனிய மதளிர் தின வாழ்த்துகள்
தமிழ் மணம் 4
அருமையான கவிதை.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteசிந்திக்க வேண்டிய நாளில்
ReplyDeleteசிந்திக்க வைக்கும் பதிவு
மிக்க நன்றி
Deleteஅருமையாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா..நன்றி
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஅழகான தமிழில், மகளிரை போற்றும் அருமையான கவிதை...
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா
மிக்க நன்றி
Deleteபோற்றவும் வேண்டாம் தூற்றவும் வேண்டாம். ஐயா தாங்கள் சொல்வது போல ஒருவருக்கொருவர் துணையாக இருந்தாலே போதும்.
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDelete