மாண்புமிகு பிரதமருக்கு
எதிரி யாக-இங்கே
மற்றவர்கள்
யாருமில்லை உதிரி யாக
தாண்டவமே ஆடுவது
அவரின் கட்சி- நாளும்
தவறாகப்
பேசுவதே அதற்கே சாட்சி!
முன்னுக்குப் பின்முரணாகக்
காரண மின்றி –பலரும்
முறையற்றுப்
பேசுவதும் சாரமே யின்றி!
என்னவெனக் கேட்கின்றார்
நல்லோர் தாமே-பிரதமர்
ஏற்றாரா? அவரமைதி ! சம்மத மாமே!
கட்சியிலே கட்டுப்பாடு
அணுவு மில்லை –யார்
காரணமோ? ஆய்வதிலே பயனு மில்லை!
ஆட்சியிலே அமைச்சருள்ளும்
இணைப்பே யில்லை –பிரத
அமைச்சருக்கு இதனால் ஆமே தொல்லை!
அடக்குவதே நன்றாகும் பிரதமர்
உடனே-நன்கு
ஆள்வதற்குச் செய்வதவர்
உரிய கடனே!
நடப்பதிலே எதுவுமே
தெளிவு, காணோம் – மக்கள்
நம்பிக்கைக்
குறைகிறது தீர்வு வேணும்!
புலவர் சா இராமாநுசம்
உண்மைதான்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉண்மையான விடயங்கள் ஐயா
ReplyDeleteதமிழ் மணம் 1
மிக்க நன்றி!
Deleteமிக்க நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி!
ReplyDeleteநட்பு அரசியலை
ReplyDeleteநயம் பட உரைத்தீர் ஐயா...
தம 2
மிக்க நன்றி!
Deleteஅய்யா தாங்கள் சொல்லியுள்ள
ReplyDeleteவிஷயம்
விஷமாக மாறுமுன்
கடன் வாங்கல் மட்டுமே கடமை என்று நினைக்கும் சில
கணவான்கள் திருந்தினால் நாடு வளமும் பலமும் பெறும்.
திருந்துவார்கள் என நம்புவோம். வேறென்ன செய்வது.
மிக்க நன்றி!
Deleteமக்களும் தெளிவு அடைய வேண்டும் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவணக்கம் ஐயா. தங்கள் உடல் நிலை சரியில்லாத நேரத்திலும். இப்படி சமுதாய சிந்தையுடன் பதிவிடுவது கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteநம்பிக்கை குறைய ஆரம்பித்தவுடன் மற்றவை பொருத்தமற்றதாக ஆகிவிடுகிறது. தற்போதைய சமூக சூழலை உணர்த்தும் கவிதை.
ReplyDeleteநடப்பதிலே எதுவுமே தெளிவு, காணோம் – மக்கள்
ReplyDeleteநம்பிக்கைக் குறைகிறது தீர்வு வேணும்!
வணக்கம் அய்யா, தங்கள் தளம் என் வருகை இது முதல் முறை, சிந்தீப்பார்களா? உரியவர்கள், கவிதை அர்தமுள்ள அழகான கவிதை.
கவிதையை படித்தேன் .... அருமையான படைப்பிற்கு சந்தொசபட்டாலும் படைப்பின் உள்கருத்து வருத்தத்தை தான் அள்ளி தந்தது. இந்திஆவிர்க்கு விமோசனமே கிடையாது போல் உள்ளது. கவிதைக்கு நன்றி ஐய்யா..
ReplyDelete