Monday, March 30, 2015

இது , பலரும் படித்து அறிய வேண்டிய முக்கியச் செய்தி!


அன்பின் இனிய உறவுகளே
வணக்கம்
காவிரியில் கர்நாடகம் இன்று அணையைக் கட்ட முற்படும் இடம் எதுவென்பது பலருக்குத் தெரியவில்லை! கபினி அணை நிரம்பியபின் எஞ்சிய நீரும், கிருட்டினராச சாகர் நிரம்பியபின் எஞ்சிய நீரும் வெளியேறி அதன்பின் தடையின்றி மேட்டூர் அணைக்குத் தற்போது வந்து கொண்டிருக்கிறது . வெள்ளம் வந்தாலன்றி மேட்டூர்
நிரம்புவதில்லை! இந்நிலையில் கபினுக்கும் கிருட்டினராச சாகருக்கும் கீழே மேட்டூருக்கு மேலே இடையில் மேகதாது என்ற
இடத்தில் அணையைக் கட்டி இதுவரை வந்து கொண்டிருக்கும் எஞ்சிய நீரையும் தடுத்துவிட கர்நாடகம் முற்படுகிறது ! மத்திய அரசோ அமைதியாக இதனை வேடிக்கைப்
பாரர்ப்பதோடு இருமாநிலங்களையும் மோத விடுவது, இந்திய ஒருமைப் பாட்டிற்குக் கேடு ஃஎன்பதை அனைவரும் உணர வேண்டும்! பிறருக்கும் உணர்த்த வேண்டும்


புலவர்  சா   இராமாநுசம்

18 comments:

  1. வணக்கம்
    ஐயா
    இரு மாநில அரசும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும்... இல்லா விட்டால் மக்கள் எழுச்சி கொள்ள வேண்டும் அறைகூவல் விட்டமைக்கு நன்றி ஐயா த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இது மாதிரி அநியாயங்களைக் கண்டு கொள்வதே இல்லை. என்ன அரசியலோ!

    ReplyDelete
  3. இருமாநிலங்களையும் மோத விடுவது, இந்திய ஒருமைப் பாட்டிற்குக் கேடு ஃஎன்பதை அனைவரும் உணர வேண்டும்! பிறருக்கும் உணர்த்த வேண்டும். த.ம.3வது

    ReplyDelete
  4. என்ன அரசாங்கமோ....வடக்கு தெற்கைக் கண்டுகொள்வதே இல்லை...அது எந்த அரசாக இருந்தாலும்....நாம் சும்மாவேனும் இந்திய ஒருமைப்பாடு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோமோ என்று தோன்றுகின்றது.....

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா வெளியான மறுநொடியே செல்லில் படித்து வாக்கும் அளித்து விட்டேன்.
    சமயமறிந்த அற்புதமான பதிவு நன்றி ஐயா வெளியிட்டமைக்கு.

    ReplyDelete
  6. வேதனை தரும் செய்தி......

    ReplyDelete
  7. நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் ஐயா...

    ReplyDelete
  8. ஒரு முக்கியமான பிரச்சினை இங்கு அரசியலாக்கப்படுகிறது என்பதே உண்மை. நியாயமான முடிவை எதிர்பார்ப்போம்.

    ReplyDelete
  9. நமது நாட்டில் எங்கும் எதிலும்
    அரசியல் அரசியல்
    தம +1

    ReplyDelete
  10. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு ,உச்ச நீதிமன்றம்தான் சொல்லணும் என்றால் மத்தியில் எதற்கு ஒரு ஆட்சி !

    ReplyDelete
  11. அன்புள்ள அய்யா,

    கபினுக்கும் கிருட்டினராச சாகருக்கும் கீழே மேட்டூருக்கு மேலே இடையில் மேகதாது என்ற இடத்தில் அணையைக் கட்டி இதுவரை வந்து கொண்டிருக்கும் எஞ்சிய நீரையும் தடுத்துவிட
    கர்நாடகம் முற்படுகிறது ! நாட்டுமக்கள் உணரவேண்டிய செய்தியை அருமையாக உணர்த்தியிருக்கிறீர்கள்.

    நதிகளைத் தேசிய மயமாக ஆக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் வேளையில்... சுயநலவாதிகள் செய்யும் அட்டூழியம்... கேட்பதற்கு ஆள் இல்லை...!

    நன்றி.
    த.ம. 11.

    ReplyDelete
  12. ஐயா நலம் நலமே விளைவு பதிவுகளைக்காணோமே...

    ReplyDelete
  13. பிறர் நலன் காணும் போக்கு அற்று வருவதற்கான செயல்.

    ReplyDelete