Saturday, March 28, 2015

முகநூலில் வந்தவை!





அன்பான கணவனுக்கும் மனைவிக்கும் அறுபது வயதைத் தாண்டினாலும் அவர் உள்ளம் இருபது வயது இளமையோடு தான்
இருக்கும்! ஐயமில்லை! ஆனால்...? இருவரில் ஒருவர் பிரிய நேர்ந்து
விட்டால்..!மற்றவர் வாழ்வு ? அதனால் விளையும், சோகம் ! சொல்லும் தரமல்ல!

உண்மையான காதலுக்குத் தான் எவ்வளவு ஆற்றல்!!!!!? காதல் முறிந்தால் அறிவும் அழிய பைத்தியமே பிடிக்கிறது! உடலும் கெடுகிறது!! உணர்வும் அற்றுப் போகிறது!இறுதியாக இறப்பு வரை செல்கிறது!

வெகு தொலைவில் தெரியும் புகையைக் கட்டி ,அங்கே ஏதோ நெருப்புப் பற்றிக் கொண்டது, என்று சொன்னால்,பார்த்தவர் யாரும்
நீ போய் நேரில் பார்த்தாயா ?என்று கேட்பதில்லை! அப்படிக் கேட்பவன் அறிவுள்ளவனாக இருக்க முடியாது ! நெருப்பு , பற்றினால்தானே புகை வரும் என்ற ,யூகித்து அறிய வேண்டிய , பொது அறிவுகூட இல்லாத அவனைப் போல் ,சிலரை , நாம், நம்
வாழ்கையில் எதிர் கொள்வது ,அதுவும் அவன் அரசியல் வாதியாக
இருந்து விட்டால்!!!? விளைவு ! சொல்லும் தரமல்ல!


தேனீ என்பது தேன் இருக்கும் இடம் எதுவோ ,அங்கே போய்தான்
உட்காரும் எனவே தான் அதனைத் தேனீ என்று சொல்வர்! ஆனால் , சாதரண சாக்கடை மலத்திலும் உட்காரும் இறைவனுக்கு வைக்கும் பிராசாதத்திலும் உட்காரும் இதுபோலத்தான் ,உலகில் நாம்
காணும் ,பழகும் மனிதர்களில் இருவகைப் பட்டவர் உள்ளனர் இதனை நாம்தான்  அறிந்து  நடந்து கொள்ள  வேண்டும்
 

புலவர் சா இராமாநுசம்

23 comments :

  1. வணக்கம்
    ஐயா
    சாதரண ஈ சாக்கடை மலத்திலும் உட்காரும் இறைவனுக்கு வைக்கும் பிராசாதத்திலும் உட்காரும் இதுபோலத்தான் ..

    நல்ல உவமை மூலம் விளக்கியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. பழகும் மனிதர்களில் இருவகைப்பட்டர்கள் உள்ளார்கள் என்பது உண்மையே. தரமறிந்து பழகவேண்டும். அதுவும் நிதானமாக.

    ReplyDelete
  3. நல்ல பதிவு அய்யா....ட்விட்டர் (குறும்பதிவு) ரிலும் தாங்கள் நிறைய பதிவிட வேண்டுகிறேன் அவைகள் உடனுக்குடன் பலரை சென்றடையும் நன்றி

    ReplyDelete
  4. தரமறிந்துதான் பழக வேண்டும்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  5. மிக்க நன்றி!

    ReplyDelete
  6. நல்லதொரு கருத்து ஐயா
    த.ம 5

    ReplyDelete
  7. இருவகைப் பட்ட மனிதர்கள் குறித்து அறிந்து கொண்டேன் அய்யா!
    நன்றி.

    ReplyDelete
  8. மிக்க நன்றி!

    ReplyDelete
  9. அருமையான கருத்து ஐயா!

    ReplyDelete
  10. அரசியல் வாதியாக இருந்து விட்டால்.... ஐயோ...!

    ReplyDelete
  11. அழகாக விளக்கியுள்ளீர்கள் இருவகை மனிதர்களை. நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  12. இப்படியான உண்மையான காதல்களை ஒழிப்பதற்குத்தான் எத்தனை கூட்டம் ....அய்யகோ....த.மா 11வது

    ReplyDelete
  13. உண்மைதான் ஐயா
    தம +1

    ReplyDelete
  14. துரதிர்ஷ்டம் என்னவென்றால் கஷ்டப் பட்டு தேனீ சேர்த்த தேனை மனிதன் அபகரித்துக் கொள்கிறான் .அது மாதிரி நல்ல மனிதர்களை நாமும் கஷ்டப் படுத்தாமல் வாழ்வதே நல்ல வாழ்க்கை !

    ReplyDelete
  15. அற்புதமான பகிர்வு அப்பா...

    மனிதன் எப்படிப்பட்டவன் என்று அறிந்து ஆராய்ந்து பழகவேண்டும் //பழகும் மனிதர்களில் இருவகைப் பட்டவர் உள்ளனர் இதனை நாம்தான் அறிந்து நடந்து கொள்ள வேண்டும்//

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...