Wednesday, March 25, 2015

காவிரிநீர் வடிகாலா எமது நாடே-மூர்க்க கர்நாடக அரசேநீ அடைவாய்க் கேடே!



காவிரிநீர் வடிகாலா எமது நாடே-மூர்க்க
கர்நாடக அரசேநீ அடைவாய்க் கேடே
பூவிரிய நீர்நிறைந்த வளமை தஞ்சை-இன்று
போயிற்று ஆயிற்றாம் நிலமோ புஞ்சை
வாய்விரிய பேசுகின்றார் மேடை ஏறி-ஆனால்
வரவில்லை ஓரணியில் உள்ளம் மாறி!
காயுண்டு கனிதன்னை எறிதல் உண்டா!-இனியும்
கட்சிகளே !உதிரிகளாய் காணல் தொண்டா

தன்முனைப்பு இல்லாமல் ஒன்று படுவீர் –ஏதும்
தடையின்றி பணிநிறுத்தம் வெல்ல விடுவீர்
துன்புறவே வாழ்கின்றான் உழவன் என்றும்-மேலும்
தொடர்ந்திடவே அணைகட்ட முயல இன்றும்
அன்பிலராம் கர்நாடகர் கேளாக் காதே-மத்திய
அரசுக்கும் இதனாலே வருமாம் தீதே
வன்புடையார் நாமென்று உணரச் செய்வோம்-எதிர்
வருங்கால சந்ததிகள் வாழ உய்வோம்

புலவர்  சா  இராமாநுசம்

14 comments:

  1. ஒன்றுபட சரியான நேரம். உணர்த்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு! அதை உணர்ந்தால் நல்லது! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. //பூவிரிய நீர்நிறைந்த வளமை தஞ்சை-இன்று
    போயிற்று ஆயிற்றாம் நிலமோ புஞ்சை//

    அருமையான சொல்லாடல் ஐயா
    த.ம 2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. ஆண்டாண்டு காலமென அடிமை யாக - வீரம்
    அறியாத தமிழினமாய் மாறிச் சாக
    நீண்டொழுகு நதிமறைத்தார் நாம்என் செய்தோம் - உண்ண
    நெருப்பிட்டார் நம்தலையை நாமே கொய்தோம்!
    மாண்டதெல்லாம் நம்மரபின் வேர்கள் -மான
    மற்றவரை மண்கூடப் பிணமாய்ப் பேணும்!
    தூண்டுகிறீர் துடித்திடுமோ தமிழன் நெஞ்சு - சற்றுத்
    தோள்கொடுப்பீர் என்றுங்கள் கவிதை கெஞ்சும்!

    அருமை அய்யா!

    தொடருங்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. இந்திய ஒருமைப் பாட்டுக்கு சவால் விடும் இக்கொடுஞ்செயலைக் கண்டு கொள்ளாத மத்திய அரசும் தமிழனுக்கு எதிரியே !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. வன்புடையார் நாமென்று உணரச் செய்வோம்-எதிர்
    வருங்கால சந்ததிகள் வாழ உய்வோம் ---

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  7. அருமையாக சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
  8. சிந்திக்க வைக்கும் வரிகளுக்கு நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  9. அன்புள்ள அய்யா,

    நதிகளைத் தேசிய மயமாக்குங்கள் என்றால்...

    நாதியில்லை...!

    இவர்கள் செய்வதென்னவோ...

    கூறுபோட்டு....

    தேசியத்தை மாயமாக்குகின்றனரே!

    காவிரியில் நீர் மிகுதியானால்...

    வேறு வழியின்றி...

    தமிழகத்திற்கு அப்பொழுது மட்டும்

    ஓடி வரும்...!

    இல்லையெனில் ஆறு வரண்டு...

    நீர் வரவுக்காகத் தாகத்தோடு காத்திருக்கும்...!

    நன்றி.
    த.ம. 9.

    ReplyDelete