காதலிக்கும்
இருவரும் தொடக்கத்துலேயே எதையும் ஆய்வு செய்ய
வேண்டும்! மணம் முடித்த பிறகு
அவர்கள் வாழும்வரை ஆய்வு செய்வது அறவே
கூடாது! அறிவுக்கும் அதிக வாய்ப்பு,வழங்கல்
ஆகாது! ஒரு கண்மூடித் தனமான
வாழ்க்கையே அவர்கள் மேற் கொள்ள
வேண்டும்! இன்றேல் இல்லறம் நல்லறமாக
அமையாது!
மனிதர்களில்
இரண்டு வகையினர் உண்டு! ஒருவகையினர் இரத்தம்
போன்ற, சித்தம் படைத்தவர்கள்! அவர்கள்,
அடி பட்ட இடத்திலிருந்து வரும்
இரத்தம் போல தமக்கு வரும்
துன்பத்திற்கு மட்டுமே வருந்துவார்கள்! இன்னொரு
வகையினர், உடலில் எங்கு அடி
பட்டாலும் வரும் கண்ணீர் போன்றவர்கள்
இவர்கள் பிறருக்கு வரும் துன்பத்தைக் கண்டும்
வருந்துவார்கள்!
கண்ணை
மூடிக்கொண்டு நட என்றால் முயன்றுப்
பார்க்கலாம்! அதோடு காலையும் கட்டி
விட்டு ஓடு என்று சொன்னால்,அதற்கும்
கட்டுப்பட முடியுமா !?அப்படித்தான்,நாம் , நம் வாழ்க்கையில் சந்திக்கும் சில மனிதர்களும், சில நிகழ்ச்சிகளும் நம்மை சங்கடத்தில் ஆழ்த்தும்! அதுபோது நாம்தான் சிந்தித்துச் செயல் பட வேண்டும்
கட்டுப்பட முடியுமா !?அப்படித்தான்,நாம் , நம் வாழ்க்கையில் சந்திக்கும் சில மனிதர்களும், சில நிகழ்ச்சிகளும் நம்மை சங்கடத்தில் ஆழ்த்தும்! அதுபோது நாம்தான் சிந்தித்துச் செயல் பட வேண்டும்
புலவர் சா
இராமாநுசம்
அருமையான வாழ்வியல் உண்மை ஐயா இதை இருவரும் நன்கு உணர்ந்தால் வெற்றி இறுதிவரை இருவருக்கும்.
ReplyDeleteதமிழ் மணம் 1
மிக்க நன்றி!
Deleteகாதலுக்கு கண்ணில்லை ,அவர்கள் வாழ்க்கை முழுவதும் கண்மூடித் தனமாகவே வாழவும் வேண்டுமா :)
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteநம் வாழ்க்கையில் சந்திக்கும் சில மனிதர்களும், சில நிகழ்ச்சிகளும் நம்மை சங்கடத்தில் ஆழ்த்தும்! அதுபோது நாம்தான் சிந்தித்துச் செயல் பட வேண்டும் .
காதலிக்கும் இருவரும் தொடக்கத்துலேயே எதையும் ஆய்வு செய்ய வேண்டும்! உண்மைதான்.
நன்றி.
த.ம.3.
காதலர்களுக்கு தேவையான அறிவுரை
ReplyDeleteத ம 4
மிக்க நன்றி!
Deleteகாதலுக்கு கண் இருப்பதால்தான் அவர்கள் காதலிக்கிறார்கள் என்றோரு கருத்து உண்டு..ஐயா..
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஆஹா ! என்ன ஒரு பொருத்தம் ஐயா! தாங்கள் காதலைப் பற்றி எழுதியுள்ளீர்கள். அறிவுரையாக. எங்கள் தளத்தில் ஒரு சிறு பெண் காதலித்தவுடன் தனது தேர்வையும் புறம் தள்ளி ஓடியிருப்பதைப் பற்றி...உங்கள் அறிவுரைகள் அவள் செவிக்கு எட்டுமா...எட்டினாலும் காதல் அறிவுக் கண்ணை மறைத்துவிடுமே! பருவ வயது...ம்ம்ம்
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteதங்களின் ஜி மெயில் முகவரி இல்லாததால் இதில் எழுதுகிறேன்... தங்கள் பார்வைக்கு...
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
வணக்கம். நலம். நாடுவதும் அதுவே!
தங்கள் வலைத்தளத்தில் மதுமதி.காம் பேட்டியைப் பார்த்தேன்.
எண்பத்தொரு வயது என்பதை அறிந்து வியந்து போனேன். தமிழாசியராக முப்பது ஆண்டுகள் பணியாற்றி இருப்பதை அறிந்து மகிழ்ந்தேன். அதோடு மட்டுமல்லாமல் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தில் தலைவராக இருந்தேன் என்று சொன்ன பொழுது பிரமித்துப் போனேன். பேட்டி முழுவதும் பார்த்து தங்களின் கருத்துகளை அறிந்தேன்.
தங்களின் துணைவியார் மறைவுக்குப் பிறகு மகளின் உதவியால் வலைத்தளத்தின் துணையோடு மகிழ்ச்சியாக 350 -க்கும் மேற்பட்ட மரபுக் கவிதைகளை எழுதி பெரிய சாதனைச் சரித்திரத்தைப் படைத்திருக்கிறீர்கள்.
தங்களைப் பற்றி அறிந்து கொள்ள தமிழகத் தமிழாசிரியர் கழகம் வெளியிட்ட மாநில மாநாட்டு மலரை எடுத்துப் பார்த்தேன்...
மேனாள் மாநில இணைச் செயலாளர் (1979)
மேனாள் மாநில தலைவராக (1982-1988 ) இருந்திருப்பதை அறிந்து புளகாங்கிதம் அடைந்தேன். மாநில தலைவர் பொறுப்பு சாதரணமானதல்ல என்பதை நான் அறிவேன்.
தாங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள நண்பர் அண்ணா ரவி அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டேன்.
தாங்கள் சென்னையில் இருப்பதாகவும்... மகள் மருத்துவராக இருப்பார் என்று நினைக்கிறேன்... சமீபத்தில் ‘வலையில் விழுந்த அலைகள்’ என்ற கவிதை நூலை வெளியிட்டீர் என்று அவர் கூறினார்.
இன்றைக்குத் தங்களைப் பற்றி அறிந்து கொண்டது எனக்கு உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேனாள் மாநிலப் பொருளாளர் திரு. மணவை தங்கவேலன் அய்யாவின் தலைமையில் ஒரு கவியரங்கத்தில் கலந்து கொண்டுள்ளேன். அன்னாரின் மறைவிற்குக் கூட அவரின் ஊரான சேர்வைக்காரன் பட்டிக்குச் சென்று இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டுவிட்டு வந்தேன்.
நான் திருச்சி ஆர்.சி.மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் (1996) பணியாற்றுகிறேன். நான் டிப்ளோமா மெக்கானிக்கல் என்ஜினியரிங் (D.M.E.) படித்து டைப்ரைட்டிங் வொகேஷனல் குரூப் ஆசிரியராகப் (1989-1996) பணியாற்றினேன். அதன் பிறகு தொலைதூரக் கல்வி மூலமாக B.Lit., M.A., M.Ed.. படித்தேன். முறையாகக் கல்லூரிக்குச் சென்று தமிழ் படிக்கவில்லை. எங்கள் பள்ளியில் பணியாற்றும் ‘ஊமைக்கனவுகள்‘ திரு. விஜு அய்யாதான் எனக்கு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.
தங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
தொடருங்கள்... தங்களின் ஆசியுடன்... அறிவுரை கூறுங்கள்... தொடர்கிறேன்.
மிக்க நன்றி.
manavaijamestamilpandit@gmail.com
lதங்கள் அன்புக்கு மிக்க நன்றி! கடந்த காலத்தை நினைக்க வைத்து விட்டீர்! உங்கள் முகவரி கொடுத்தால் நான் வெளியிட்ட, என் நூலை அனுப்புகிறேன்
Deleteமின்னஞ்சல்- jram1932@gmail.com
செல்-9094766822
"காதலிக்கும் இருவரும் தொடக்கத்துலேயே எதையும் ஆய்வு செய்ய வேண்டும்! மணம் முடித்த பிறகு அவர்கள் வாழும்வரை ஆய்வு செய்வது அறவே கூடாது!" என்ற உண்மையை
ReplyDeleteஇன்றைய இளசுகள் உணர வேண்டுமே!
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
மிக்க நன்றி!
Deleteஅனுபவ வரிகள் அனைவருக்கும் பாடங்கள் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteமிக்க நன்றி!
ReplyDeleteஆய்வு முக்கியம் என்பதை அறிந்து கொண்டேன். நன்றியுடன் தொடருகிறேன் ஐயா.....
ReplyDelete