கண்ணில்லார் வாழ்வதே மிகவும் அரிது –கற்ற
கல்வியிலே பட்டமவர் பெற்றல் பெரிது!
எண்ணிலார் அவ்வகையர் வேலைக் கேட்டும்-இன்று
வீதிக்கு வந்தபின்பும் அந்தோ வாட்டும்!
பண்பில்லா அரசாக இருக்க லாமா-என்ன
பாவமவர் செய்தார்கள்! துயரம் போமா!
கண்ணில்லார் அவரா ! நாமே ஆகும் –கேட்கும்
காதில்லார் அரசிதுவே துயரா? போகும்!
புலவர் சா இராமாநுசம்
கல்லாதோர் கண்ணில்லார் என்றே அன்று
ReplyDeleteகடிந்துரைத்த வள்ளுவனின் வாக்கைக் காட்டிக்
கல்லல்லோம்! கற்றதனால் கண்ணே கொண்டோம்!!
காணதோர் தாம்குருடர்!!! கண்ணீர்த் தீவில்
புல்வளரும்! பசிஎம்மைப் புசித்து மேயும்!
புரியாதோ எம்நிலைமை? பணியே செய்ய
வல்லோம்யாம்! இரந்துண்ணோம்!! என்றோர் வாழ்வை
வடிக்குமும் சீர்கவிதை வாழ்க வாழ்க!
அருமையான கவி அய்யா!
இன்னும் தாருங்கள்!!!
தம கூடுதல் 1
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
ஒவ்வொரு வரிகளும் மிக அருமை வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஅரசு கொஞ்சம் கருணை காட்டலாம்தான்! அருமையான கருத்துள்ள பாடல்! நன்றி!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteஅருமை ஐயா நல்ல கருத்துகள்.
ReplyDeleteத.ம.3
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteசாதிக்கும் சான்றிதழ்கள் கேட்கும் நாட்டின்
ReplyDeleteசரித்திரமே அரசியலால் மாறும் !இங்கே
வாதிக்கும் எம்மவரின் வாழ்க்கை கூட்டில்
வரலாறு இதுவென்றே வம்சம் நோகும்
நீதியினை தேடுகின்ற நேரம் வீணாய்
நிகழ்காலம் எரிகிறது பஞ்சுத் தூணாய்
பாதியிலே உயிர்போகும் ஆசை கொள்ளின்
பணிவின்றி அரசுக்கொர் பாடம் சொல்வீர் !
செய்கின்ற வேலைக்கும் தேறாக் கூலி
செயலாக்கும் இடைத்தரகர் ! கேட்டால் காலி
உய்கின்ற வழியெல்லாம் ஊழல் வாசம்
உயிர்பறிக்கும் பசியாலே போகும் மானம்
எய்தவனே இருக்கின்றான் ஆட்சிப் பீடம்
எவர்வந்து அறுத்திடுவார் வில்லின் நாணும்
தெய்வத்தால் ஆகிடுமோ அறியேன் நானும்
தெரிந்திட்டால் தாழ்பணிவேன் அடியேன் வானும் !
பட்டத்தைப் பசிபோக்க உண்ண லாமோ
பகுத்தறிவை விலைபேசி விற்க லாமோ
விட்டத்தைப் பார்த்தழுதல் வீணே ஆகும்
விதியென்னும் அறிவிலியை எரித்தால் போதும்
திட்டத்தை வகுத்திங்கு தீர்வைத் தேடும்
திறனாளர் பலவுள்ளார் தேடிச் சேர்ப்போம்
கொட்டியெமை குனிக்கின்ற கொடுமை காரர்
குணமதனை மாற்றிடுவோம் கொள்கை யாலே
அருமையான கவிதை ஐயா நானும் ஏதோ எனக்கு தெரிந்தமட்டில் கிறுக்கிவிட்டேன் பிழை இருப்பின் பொறுத்தருள்க !
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தம 4
வருகைக்கு மிக்க நன்றி! வரைந்த கவிதையும் நன்று!
Deleteதற்போது பார்வையற்றவர்கள் படும் பாட்டை பாடலாகச் சொன்ன புலவர் அய்யாவுக்கு வணக்கங்கள்! பொருள் நிறைந்த சமகால நிகழ்வுக் கவிதை. அருமை!
ReplyDeleteத ம 5
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteயதார்த்தத்தை மிக அழகாக கவிதை வடிவில் வடித்துத் தந்துள்ளீர்கள். நன்றி.
ReplyDeleteஇவர்கள் மீதே கருணைக் காட்டாத அரசு , யார் மீது கருணைக் காட்டும் :)
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி
Deleteகருத்துள்ள (கருணையுள்ள) வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி
Deleteசிந்திக்க வேண்டும் அரசும். பகிர்வுக்கு நன்றிங்க ஐயா.
ReplyDelete