Sunday, March 15, 2015

முகநூல் துணுக்குள்- பகுதி இரண்டு!





உடல் அழுக்கைப் போக்க நீரைப் பயன் படுத்துகிறோம் !உடல் சுத்தமாகிறது! கூடவே ஒரு சுகமும் கிடைக்கிறது ! அது போல உள்ள அழுக்கைப் போக்க, உள்ளமும் நல்ல குணங்களில் மூழ்கி தன்னைத் தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்! அதனால் வரும் இன்பம் தான் நிலையான நிம்மதியைத் தரும்

நன்கு படிப்பதனால் அறிவு வரலாம்!ஆனால் ஒழுக்கம் வந்து விடாது
விளக்கை ஏற்றினால் வீட்டில் வெளிச்சம் வர, இருள் போகுமே தவிர வீடு தூய்மை ஆகிவிடுமா !? கண்ணுக்குத் தெரியும் குப்பைக்களை அகற்ற கூட்டி பெருக்கத்தானே வேண்டும்! விளக்கு ,வெளிச்சத்தில் குப்பைகள் கண்ணுக்குத் தெரிவது போல நாம் கற்ற அறிவாகிய விளக்கு வெளிச்சத்தில் சமுதாய வீட்டில் காணப்படும் ஒழுங்கீனங்களை முற்றும் நீக்கி நாம் , நம்முடைய ஒழுக்கத்தை நிலை நாட்ட வேண்டும்!


விண்ணிலிருந்து வீழ்கின்ற மழைத்துளி போல, ஏதும் கலப்படமற்ற தூய நீரைப் போன்றவர்கள் குழந்தைகள்! மழைத்துளி தான் வந்து விழுகின்ற இடத்திற்கேற்ப மாறுபடுவது போல குழந்தைகளும் தான் வாழும், வளரும் சூழ்நிலைகேற்ப நல்லராகவோ, கெட்டவராகவோ ஆவார்கள் என்பதைப் பெற்றவர்கள் உணர்ந்து
தம் ,குழந்தைகளை வளர்ப்பது நன்று!

புலவர் சா இராமாநுசம்

8 comments:

  1. #ஏதும் கலப்படமற்ற தூய நீரைப் போன்றவர்கள்#
    எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பாடல் நினைவுக்கு வந்தது :)

    ReplyDelete
  2. அருமையான கருத்து !பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete