உறவுகளே!
இன்று , என்னை விட்டுப் பிரிந்த மனைவியின்(பிரமீளா மருத்துவர்)
பிறந்த நாளாகும்! அவள் நினைவாகக் இக்கவிதை!
தன்னலம் காணாத் தகவுடையாள் –எதிலும்
தனக்கென நற்குணம் மிகவுடையாள்
இன்னவர் இனியவர் பாராமல் –உதவ
எவருக்கும் மறுப்புக் கூறாமல்
என்னவள் இவளே செய்திடுவாள் –வரும்
ஏழைக்கே மருந்தும் தந்துடுவாள்
அன்னவள் மருத்துவ மாமணியே –புகழ்
அறிந்திட இயலாப் பாவழியே
புலவர் சா இராமாநுசம்
மனைவியின் மீதான தங்களின் பாசத்தை கண்டேன் ஐயா.பிரிந்த பிறகும் மனைவியை நினைப்போர் இவ்வுலகில் மிகவும் குறைவு தங்களின் எண்ணங்களுக்கு தலை வணங்குகிறேன்.
ReplyDeleteதமிழ் மணம் 1
மிக்க நன்றி!
Deleteதம +1
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா.
மனைவி இல்லா விட்டலும் அவர்களின் நினைவில் பொழிந்த கவித்துவம் கண்டு மகிழ்ந்தேன் த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteவணங்குகிறேன் ஐயா....
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteநினைவில் வாழும் துணைவிக்கு நீங்கள் தந்த பிறந்த நாள் பரிசு அருமை !
ReplyDeleteத ம 6
மிக்க நன்றி
Deleteபொற்றாலி யோடெல்லாம் போமென்ற அவ்வை சொல்
ReplyDeleteஉற்றறிய, பெண்ணன்றி உங்கட்கும் - அற்புதமாய்க்
கொண்ட கனவுகளில் காலத் திரையிழுக்கக்
கண்டவராய்ச் செய்தீர் கவி!
பாடல்வழி உங்களின் அன்பு தெரிகிறது அய்யா!
தொடர்கிறேன்.