Friday, February 27, 2015

கலையெனவே கொலைகூட ஆயிற் றிங்கே –கயவர் கைக்கூலி, பெறுகின்றார் கருணை எங்கே!?



கொலைகொள்ளை நடக்காத நாளே இல்லை –இந்த
கொடுமைக்கு, விடிவுவர உண்டா எல்லை!
கலையெனவே கொலைகூட ஆயிற் றிங்கே –கயவர்
கைக்கூலி, பெறுகின்றார் கருணை எங்கே!?
நிலைகுலைந்து வாழ்கின்றார் மக்கள் நாளும்-சற்றும்
நிம்மதியே இல்லாமல் அச்சம் மூளும்
வலைவீசி தேடுவதாய்க் காவல் துறையும் –செய்தி
வருகிறது! என்னபயன்! எப்படிக் குறையும்!?


பொதுமக்கள் ! நமக்குமிதில் பொறுப்பு வேண்டும்-வீட்டைப்
பூட்டிவிட்டால் , போதாது காக்க ஈண்டும்!
எதைவீட்டில் வைப்பதென எண்ண வேண்டும்-அதற்கு
ஏற்றவழி என்னவெனக் ஆய்வீர் யாண்டும்!
முதுமக்கள் தனித்திருப்பின் , காவல் துறைக்கே-நாமே
முறையாகத் தெரிவிப்போம்! குற்றம் தவிர்க்க!
இதுபோல ,மேலும்சில நாமும் செய்வோம் –ஏதோ
இயன்றவரை நமைக்காக்க முயலின்! உய்வோம்!

புலவர் சா இராமாநுசம்

13 comments:

  1. நமக்கு நாமே திட்டம்தான் சரிப்படும் :)
    த ம 1

    ReplyDelete
  2. விளிப்புணர்வு கவிதை அருமை ஐயா
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா

    கருத்து மிக்க வார்த்தைகள் சொல்லிச் சென்றீர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தால் நன்று பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. கவிதை வரிகள் மிக அருமை ஐயா! நம்மை நாமேதான் பாதுகாஹ்துக் கொள்ள வேண்டுமோ....

    ReplyDelete
  5. மிக்க நன்றி!

    ReplyDelete
  6. சீர்மிகு உண்மை வரிகள் ஐயா
    தம +1

    ReplyDelete
  7. வலையுலகில் மரபெனும்வேர் ஊன்றிப் பாட்டில்
       வடிக்கின்ற விதமருமை! வாட்டும் புன்மை
    நிலைகெடுக எனக்கொள்கை நிறுத்தும் பாங்கால்
       நேர்படுமிக் குமுகாய மென்ற நோக்கில்
    சிலைவடிக்குஞ் சிற்பியெனக் கழிவை வெட்டிச்
       செதுக்குகின்ற கவிஇராமா நுசமே வாழி!
    அலைகடலாய் மனக்கரையை அடித்தி ழுத்து
       அகங்கொண்டு போமுங்கள் கவிதை வாழி!!

    அருமை அய்யா! மிக அருமையான சமுதாயம் உணர வேண்டிய பாடல்,,,,, நம் மரபிற் காண்பது இன்னும் சுகமே!

    த ம 7

    ReplyDelete