Tuesday, January 6, 2015

சற்று நாவடக்கம் காத்திடுமாம் நாட்டை அதுவே!


அண்ணல்காந்திப் படத்தினயே அகற்றச் சொல்லும்-அந்த
ஆணவத்தை கேட்டீரா! உயிரைக் கொல்லும்!
எண்ணமென்ன மதவெறியா! ? வேண்டாம் இங்கே- ஊதி
எழுப்புவதா ஒற்றுமையைக் குலைக்கும் சங்கே!

கோயில் கட்டப் போகின்றார் கோட்சேவுகாம்-அதில்
கும்பிடவும் சிலை வைப்பார் கோட்சேவுகாம்-!
நோயுள்ளம் பெற்றாராம் அந்தோ இவரே-நல்ல
நோக்கமில்லார்! இவருக்கு இல்லை நிகரே!

தேசபிதா அவரென்று உலகம் போற்றும்-அறவழி
தேடிதந்த சுதந்திரத்தை என்றும் சாற்றும்!
நாசபுத்திக் காரர்களே போதும் இதுவே-சற்று
நாவடக்கம் காத்திடுமாம் நாட்டை அதுவே!

புலவர் சா இராமாநுசம்

19 comments :

  1. என்ன கொடுமை...நாவடக்கம் வேண்டும் என்பதை நயமாக சொன்னீர்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  2. இப்படிச் சொன்னவர்களுக்கு சொல்வதற்க்கு அதிகாரம் கொடுத்ததே நாம் தானே ஐயா,,,,?
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  3. நாவடக்கம் என்றும் நன்மை தரும்.அருமை ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  4. கோட்சே கோவி..... சொல்லவே நா கூசுகிறது.

    அருமை புலவர் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  5. குரங்கு கையில் பூமாலையோ இந்த கட்சியின் ஆட்சி ?
    த ம 9

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  6. மதம் பிடித்து ஆடுகிறார்கள் ஐயா...
    நல்ல கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  7. புலவர் ஐயா ! நம்மை சோகத்தில் ஆழ்த்தும் நல்ல கவிதை! தேசிய தொலைகாட்சியில் ஒரு நபர் " மகாத்மா காந்தியை தேசபிதா" என்று எந்த சட்டத்தில் இருகின்றது என்கிறார். அதுமட்டும் இல்லாமல், கோட்சே என்பவர் மகாத்மா காந்தியை கொன்றாரே என்று கேட்ட போது, "Killing for a Good Cause is not a Crime " என்கிறார்.

    என்னை பொறுத்தவரை இது ஆரம்பம் தான்! போக போக என்ன என்ன நடக்க போகின்றதோ என்று நினைத்தாலே உள்ளம் நடுகுகின்றது.

    ReplyDelete
  8. இதயத்தைக் கனக்க வைத்த செய்தி !மிகவும் உணர்வுபூர்வமாகச்
    சொன்னீர்கள் ஐயா ¨நாவடக்கம் அவர்களுக்கு அவசியமே .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  9. நன்மை தரும் கருத்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  10. ம்ம்ம் நாடு எங்கேயோ போய்க்கொண்டிருக்கின்றது என்பதைத் தவிர சொல்ல வேறு ஒன்றும் இல்லை ஐயா! நல்ல கவிதை வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...