Sunday, January 4, 2015

ஆங்கிலப் புத்தாண்டே வருக !



ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும்
அனைவர்க்கும் ஆனந்தம் தருக
ஏங்கியே ஏழைகள் வாழ – குடிசை
இல்லாமல் வளமனைச் சூழ
தாங்கிட அன்னாரை நீயும் –இன்பம்
நிலையாக தடையின்றிப் பாயும்
தீங்கின்றி கழியட்டும் ஆண்டே –மக்கள்
தேவைகள் நிறைவேற ஈண்டே


இயற்கையின் சீற்றங்கள் கண்டே –எங்கள்
இதயமும் உடைவது உண்டே
செயற்கையால் வருவதே அறிவோம் – இனி
செய்வதை ஆய்ந்துமே செய்வோம்
இயற்கையின் கோபத்தை நீக்க –எம்மின்
இன்னல்கள் இல்லாது போக்க
முயற்சியும் செய்வாய ஆண்டே – மக்கள்
முன்னேற தடையின்றி ஈண்டே

உழவனும் அழுகின்றான் இங்கே – அவன்
உழைத்தாலும் பலன்போதல் எங்கே
தழைத்ததா அவன்வாழ்வு இல்லை – தினம்
தவித்தவன் பெறுவதோ தொல்லை
பிழைத்திட பருவத்தில் மாரி – வந்து
பெய்திடச் தருவாயா வாரி
செழித்திட உலகமே ஆண்டே –உடன்
செய்திட வேண்டினோம் ஈண்டே

இல்லாமை நீங்கிட வேண்டும் – ஏழை
இல்லாத நிலையென்றும் வேண்டும்
கல்லாதார் இல்லாமை வேண்டும் – கல்வி
கற்றாரை மதித்திட வேண்டும்
கொல்லமை விரதமாய் வேண்டும் –நற்
குணங்களும் வளர்ந்திட வேண்டும்
எல்லாரும் வாழ்ந்திட ஆண்டே –நீயும்
ஏற்றது செய்வாயா ஈண்டே!

புலவர் சா இராமாநுசம்

29 comments :

  1. புலவர் அய்யாவுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  2. வணக்கம்
    ஐயா.

    கவிதை அருமையாக உள்ளது இரசித்தேன் எல்லாத்துன்பங்களும் நீங்கி மகிழ்ச்சி மலரட்டும் பகிர்வுக்கு நன்றி
    இனிய அங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  3. சந்தோசமான ஆண்டாக அமைய ஐயாவிற்கும் ஐயா குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  4. அருமை. எதிர்பார்ப்புகள் நிறைவேறட்டும்!

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  5. #நீயும்ஏற்றது செய்வாயா#
    உங்களின் ஏக்கம் நிறைவேறினால் நானும் மகிழ்வேன் !
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  6. இல்லாமை நீங்கிட வேண்டும்.. வேண்டியன எல்லாம் கிடைத்தால் நன்றாகவே இருக்கும்.
    புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  8. இல்லாமை நீங்கிட வேண்டும் – ஏழை
    இல்லாத நிலையென்றும் வேண்டும்
    அருமை அய்யா தங்களின் கனவுகள் பலிக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  9. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
    தம 8

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  10. ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  11. புத்தாண்டை வரவேற்கும் கருத்துள்ள கவிதை .
    கவிதையில் சொல்லியவை நிறைவேறவேண்டும் .புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா!

    புத்தாண்டுக் கவிதை அருமை!

    தங்களுக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  13. கவிதை அருமை.

    ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் புலவர் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  14. புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.முழு உடல் நலத்தோடு மற்றோருக்கு வழிகாட்டும் பணியைத்தொடர வேங்கடவன் அருள் புரியட்டும்!

    ReplyDelete
  15. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  16. ஆங்கிலப் புத்தாண்டுக்கான கவிதை அருமை...
    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...