முன்காணா மணிலாவைக் கண்டே வந்தேன்-நாளும்
முன்னேற மக்களவர் முயற்சி, செந்தேன்!
தன்பணி என்னவென அறிந்துக் கொண்டே- அவர்
தவறின்றி உழைக்கின்ற அழகுக் கண்டே!
என்பணி விரிவாக எழுத வேண்டும்- ஆனால்
இயலாமை! முதுமை !முடக்க ஈண்டும்!
பின்பதனை முடிந்தவரை எழுது கின்றேன் –சிலநாள்
பொறுத்திடுவீர்! உறவுகளே தொழுது நின்றேன்!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் ஐயா !
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு தங்களின் தேன் சிந்தும் கவிதை
மழை அரங்கேறட்டும் ஐயா .உடல் நலன் தேறும் வரை நாமும் காத்திருப்போம் கடவுள் தங்களின் உடல் நலன் தேற நல்லாசி வழங்கட்டும் .
நன்றி!
Deleteவணக்கம் ஐயா!
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
இளைப்பாறி வந்து இடுங்கள் அனுபவத்தை!
உங்கள் நலங்காக வேண்டி வாழ்த்துகிறேன்!
நன்றி!
Deleteஇயன்றபோது எழுதுங்கள் ஐயா.என்றும் எங்களின் நினைவில் நிற்பவர் தாங்கள்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள்
நன்றி!
Deleteகவிதை அருமை...
ReplyDeleteஉடல் நலம் பாருங்கள் ஐயா...
பின்னர் எழுதலாம்.... காத்திருக்கிறோம்...
நன்றி!
Deleteஉடல்நலம் தான் முதலில் முக்கியம் ஐயா...
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
நன்றி!
Deleteதங்களின் நலன் முக்கியம். நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் உயிரோட்டமான கவிதைகளை படித்தேன். சிறப்பு. ஓய்வெடுங்கள். அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.
ReplyDeleteநன்றி!
Deleteமுடிந்தவரை எழுதுங்கள் ஐயா
ReplyDeleteஎமது புதிய பதிவு எ.எ.எ.
தங்கள் வருகைக்கு நன்றி !
Deleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி !
Deleteஓய்வெடுத்து விட்டு எழுதுங்கள் புலவர் ஐயா.
ReplyDeleteஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கு நன்றி !
Deleteமுடிந்தவரை எழுதுங்கள், உங்கள் எழுத்துக்கள் எமக்கு பாடங்கள்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
கோ
தங்கள் வருகைக்கு நன்றி !
Deleteமணிலா பயணம் சிறப்பாக அமைந்தது அறிந்து மகிழ்ச்சி. உங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள காத்திருப்புடன் நானும்....
ReplyDelete