Saturday, November 29, 2014
ஆகின்ற ஒன்றா அது !
ஆண்டான் அடிமை அகம்பாவம் தீராதோ
ஈண்டார் வருவாரோ ஏங்குகிறேன் –வேண்டாவே
போகின்ற போக்கிங்கே போகும்வழி நோக்கற்றே
ஆகின்ற ஒன்றா அது
புலவர் சா இராமாநுசம்
Friday, November 28, 2014
பொல்லாதாம்! என்றே புகல் !
சாதியெனும்
தீயிங்கே சாகாமல் தானிருக்க
நீதியெனும் ஒன்றெங்கோ
போயிற்றாம் –ஆதியிலே
இல்லாத
ஒன்றலவா ஏனிந்த வன்கொடுமை
பொல்லாதாம்! என்றே புகல்
Thursday, November 27, 2014
கண்ணில் தெரியக் கயிறு!
தங்கம் விலைகண்டே தான்திருட கள்வர்களும்
எங்குமதைத் தேடுகின்றார் இன்றதனால்- மங்கையரே
எண்ணி நடப்பீரே எப்படிதான் காப்பீரோ
கண்ணில் தெரியக் கயிறு!
Wednesday, November 26, 2014
அம்மா! அறுக்கும் அது !
நாள்காட்டி தானெடுத்தோர் நாளைக் கிழிப்பதுவும்
தாளென்று எண்ணாதீர்! தப்பாகும்! –வாளாகி,
நம்வாழ்வில்! நாளொன்று போனதென நாமறிய
அம்மா! அறுக்கும் அது
புலவர் சா இராமாநுசம்
‹
›
Home
View web version