ஏழைபண காரருக்கு
நீதி ஒன்றே –என
எண்ணிவிட இயலாத நிலைதான்
இன்றே!
பேழைதனில் உள்ளபணம் மாற்றி விடுமே –அறப்
பிழையன்றோ
இதனாலே முற்றும் கெடுமே!
கோழைகளாய் வாய்மூட
குமுறும் நெஞ்சம் –ஏழை
குரலங்கே
எடுபடுமா! அந்தோ அஞ்சும்!
வாழவழி செய்திடுமா புதிய ஆட்சி
–இனி
வருங்கால நடைமுறைகள் வழங்கும் சாட்சி!
வற்றாத ஊற்றாக
ஊழல் இங்கே –இனியும்
வளர்ந்திட்டால் வந்திடிமா வளமை அங்கே!
முற்றாக ஒழித்திடவே வழிகள் தேடி
–அதை
முதற்பணியாய் செய்வீரேல் நன்மை கோடி!
உற்றாரா ! உறவினரா உரிமை கொண்டே –எவர்
உம்மிடமே வந்தாலும் மறுத்து விண்டே!
பொற்றா மரையாக விளங்க வேண்டும் –அரசின்
புகழுக்கே, சான்றாகும் ! அதுவே ஈண்டும்!
புலவர் சா இராமாநுசம்