உறவுகளே
வணக்கம்!
பூக்கின்ற
எல்லாப்
பூக்களும்
பிஞ்சாவதில்லை!
எல்லா
பிஞ்சுகளும்
காயாவதில்லை!
எல்லாக்
காய்களும்
கனியாவதில்லை!
எனவே,
வாழ்கையில்,
நாம்
எண்ணும்
எண்ணங்களும்,
செய்ய
முற்படும்
செயல்களும்
பலபலவே
ஆனாலும்,
சிலசிலவே
வெற்றி
பெறும்
,என்பதை
உணர
வேண்டும்!
அதுதான்
அமைதியான
வாழ்கைக்கு
வழி
கோலும்
நெருஞ்சி
முள்
நிறைந்த
இடத்தில்
வெறும்
காலை
வைத்தால்
பாதம்
முழுவதும்
முள்
குத்திக்
கொள்ளும்!
ஐயோ
என்று
காலை
மாற்றி
மாற்றி
வைத்தாலும்
அதே
நிலைதான்!
அது
தீரவேண்டுமென்றால்
,முள்ளற்ற
இடம்
நோக்கிப்
போக
வேண்டும்!
அதுபோல,
சில
சூழ்நிலைகளில்
, சில
நிகழ்ச்சிகள்
நம்,
மனதில்
முள்ளாகக்
உறுத்திக்
கொண்டே
இருக்கின்றன
என்றால்
,அதைவிட்டு
விலகி
வேறு
வகையில்
எண்ணங்களை
திருப்புவதே
புத்திசாலித்தனமாகும்!
ஒருநாள்தான்
வாழ்வு
, என்றாலும்
மலர்கள்
பூக்கத்தானே
செய்கின்றன!
அதுவும்,
தனக்கே
உரிய
அழகும்,
நிறமும்
மாறாமல்,மனதை மயக்கும்
மணத்தை
வீசி,
காலா
காலமாக,
இயற்கையோடு
இணைந்து
நடப்பதை
கண்டும்,
இந்த
மனிதப்
பிறவிகள்
மட்டும்
இயற்கைக்கு
மாறாக,ஏன், எதிரியாக
நடந்து
கொண்டு
தனக்குத்
தானே
அழிவைத்
தேடிக்
கொள்கிறான்!
புரியவில்லையே!
பகுத்தறிவு
, என்று,
ஒன்று
இருப்பதுதான்
காரணமோ!!!?
அழகானவை!
குற்றமில்லாமல்
திருத்தமா
பேசுதலே
கல்வி
கற்றவர்களுக்கு
அழகாகும்!
செல்வம்
உடையவர்கள்
, தம்
நெருங்கிய
சுற்றத்தாருக்கு
உதவி
செய்தலே
அழகாகும்!
வேதம்
ஓதுகின்ற
வேதியர்களுக்கு
ஒழுக்கமே
அழகாகும்!
நீதி,
தவறாமல்
ஆட்சி
செய்வதே
அரசனுக்கு
அழகாகும்!
வாணிகம்
செய்வார்க்கு
மேலும்,
மேலும்
வருமானத்தைப்
பெருக்குவதே
அழகாகும்!
உழவர்,
உழுது
பயிர்
செய்து
உண்டு
வாழ்வதே
அழகாகும்!
(வெற்றிவேற்கை)
உலக
நீதி!
குழந்தைகளுக்குச்
சொல்லித்
தர
வேண்டியவை!
படிக்காமல்
ஒருநாளும்
இருக்காதே!
பிறர்
மனம்
வருந்தும்படி
எதையும்
சொல்லாதே!
பெற்ற
தாயை
என்றும்
மறவாதே!
வஞ்சனையாய்
தீமை
செய்வாரோடு
சேராதே!
போகத்
தகாத
இடங்களுக்குப்
போகாதே!
ஒருவர்
நம்மை
விட்டுப்
போனபின்பஅவரைப்பற்றி
இழிவாகப்
பேசாதே!
(தெடரும்)
பொதுவாக
ஐம்புலன்களையும்
அடக்கி
வாழ்வதுதான்
சிறப்பு
என்றாலும்,
வாய்
,அதாவது
நாக்கு
,அதைமட்டுமாவது
அடக்கியே
வாழ
வேண்டும்!
வள்ளுவர்
இதனைப்பற்றி
தனியாகவே
கூறுகிறார்
! நம்முடைய
வாய்
பேசுவதற்கும்
,உண்ணும்
உணவின்
சுவையை
அறிவதற்கும்
துணையாக
இருப்பதே
நாக்குதான்!
ஒருவன்
, புலன்களில்
எதனை
அடக்க
முடியாவிட்டாலும்
நாக்கை
மட்டுமாவது
கட்டுப்
படுத்தாமல்
விட்டால்
, மற்றவர்களின்
இழி
சொல்லுக்கும்,
பழி
சொல்லுக்கும்
ஆளாகி
சோகத்தையே
முடிவாக
பெறுவார்கள்
தகாத
சொற்களைப்
பேசுவதால்
வருவது
தண்டணைதான்
என்ற
நேர்
பொருளோடு
,குறிப்புப்
பொருளாக,
சுவை
அறிய
உதவும்
நாக்கால்
தகாத(உடல்
நலத்திற்கு)
உணவுகளை
உண்ணுவதும்
கேடுதான்
என்பதையும்,
நயமாக
உணர்த்துவது
இன்புறத்
தக்கது!
யாகாவா
ராயினும்
நாகாக்க
காவாக்கால்
சோகாப்பர்
சொல்லிழுக்குப்
பட்டு
-குறள்
புலவர்
சா இராமாநுசம்